மகிழினி - மேகமோ அவள்
தான்
என்ற சொல் தாண்டி
பார் பார்க்க தவறிய
இடம்,
மேகம்
கருப்பு கொடி காட்டி
போதும் இவள்
மனம் கண்ணீர் கசிந்தது.
காற்றோடு கலந்த
மரங்களின் சத்தம்
இசையாய் இவள்
கேட்க முடியாத போது
இவள்
மனம் கண்ணீர் கசிந்தது.
அலைந்து தேடி
பல மையில் நடந்து
தண்ணீர் எடுக்க சென்ற பொழுது
சொட்டு சொட்டாய்
வியர்வை உள்ளாடை
நனைத்த போது இவள்
மனம் கண்ணீர் கசிந்தது.
காமம் கொண்ட சிலரின்
தீண்டலின் நோக்கம்
அறிந்தும்,
என்ன செய்வது அறியாது
திகைத்து நின்ற போது இவள்
மனம் கண்ணீர் கசிந்தது.
உணர்வுகள் ஒடுக்கப்பட்டு
யார் மீதும் கோவம்
வெளிபடுத்த முடியாமல்
நின்ற போது இவள்
மனம் கண்ணீர் கசிந்தது.
சில கலக்கம் கொண்ட
இவள் மனம்,
நேரம் அறியாமல்
இவள்
எண்ணங்களின் தாக்கம்,
மனம் கசிந்து
கண்ணீர் மழை நிலம்
தொட்டது.
0 கருத்துக்கள்: