• மகிழினி - மங்கை

    மகிழினி -  மங்கை

    இயற்கை பருவ மாற்றம்
    விவசாயிகளுக்கு மகிழ்ச்சி
    பெண் குழந்தையின் வயது
    பரிமாண மாற்றம்
    தாய் சக்தியின்
    அதித மகிழ்ச்சி.

    இன்பம் எவ்வண்ணமோ
    துன்பமும் அவ்வண்ணமே
    மகிழ்ச்சியில் உட்சம் தொட
    பயமும் உடன் வருமே தாய்க்கு. 

    ஒவ்வொரு தீண்டலும்
    ஒவ்வொரு பார்வையும்
    ஒவ்வொரு பேச்சிலும்
    ஒவ்வொரு  செய்கையும்
    இனி யோசிக்க
    இவளும்
    ஒரு வரம்புக்குள்
    ஒடுக்கப்படுவாள்

    சமூக சாக்கடையில் இவள்
    தள்ளப்படும் நேரம் இது தான்,
    பேசவும் செய்யும் செயலையும்
    அவளுக்கு போடும்  ஒரு
    144 தடை.

    இனி மாதம் ஒரு முறை
    நான்கு நாட்கள்
    இவள் உலகம் பார்க்கமாட்டாள்
    அதிகம் பேச மாட்டாள்
    உடலும் உள்ளமும் இவள்
    பேச்சு கேட்காது. 

    இவள் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தம்
    நாளை ஒரு உயிர்க்கு  சேரும்
    இவள் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தம்
    யாரும் பேச மாட்டார்கள்
    இவள் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தம்
    சமூகத்தில் கறை துடைக்கும்
    இவள் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தம்
    இவள் புதுமை பெரும் நேரம்
    ஆமாம் மகிழினியும்
    ஒரு அழகு மங்கை தான்.

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக