• பார் செய்த தவறோ ?

    பார் செய்த தவறோ ? 



    மனிதன் பிறப்பில்
    பால் கொண்டு பிரிவினை
    செய்தவன் யாரோ ?
    பின்பு பாலின
    ஹார்மோன்கலின்  மாற்றங்களால்
    ஒரு பிரிவினை
    செய்தது யாரோ.

    ஆண் என்ற பாலினத்தை
    பெருமை பேசும்
    இந்த பார்
    பெண் என்ற பாலினத்தின்
    உரிமை குரல்
    கேளாது இருப்பது ஏனோ?

    வயது  தடையில்லை
    வண்ணம் தடையில்லை
    சாதி தடையில்லை
    மதம் தடையில்லை
    இடம் தடையில்லை
    என திருமணப் பெண்
    தேட யாரும் முனைவது இல்லை
    ஆனால் வன்புணர்ச்சிக்கு  இவை
    பொருந்துமாம்
    இந்த ஆணாதிக்க சமூகத்திற்கு
    சட்டம் ஒரு தடையில்லை.

    பெண்ணுக்கு நீதி கேட்டோம்
    பெண் குழந்தைக்கு நீதி கேட்கிறோம்
    இன்று கேட்கிறோம்
    நாளை கேட்போம்
    என்று ஓயும் இந்த
    நீதி கேட்கும் குரல்.

    வன்புணர்ச்சி செய்யும்
    மிருகங்களுக்கு
    பாதுகாப்பு சட்டம்
    என்று சொல்லவதில்
    தாய் நாட்டின் மீது
    கர்வம் வருமா ?

    பெண் தெய்வம்
    என போற்றி பாடிய  சமூகமே
    பெண் "தெய்வம்" போல
    மதிக்கும் உணர்வு வேண்டாம்,
    எந்த தெய்வமும் பெண்ணை
    வன்புணர்ச்சியின்  போதும்
    பாலியல்ரீதியான கஷ்டங்களில்
    காப்பாற்ற
    வந்தது இல்லை
    பெண்ணை பெண்ணாய்
    மதித்தால் போதுமே.

    பெண்ணை பேணிப் பாதுகாக்க
    சொல்லும் இந்த சமூகமே
    ஏன் ஆண்களிடம்
    உரக்க சொல்லுவதில்லை
    "பெண் காமப்பொருள் இல்லை
    அவளும்  சதை உணர்வு இரத்தம் கொண்ட
    ஒரு மனித உயிர் "
    என்று,
    சமூகமே ஏன் ஆண்களிடம்
    உரக்க சொல்லுவதில்லை
    "உன் சகோதரிகள், தாயாய் போலவே
    மற்ற பெண்களும் எல்லாம் உண்டு  "
    என்று,
    சமூகமே  ஏன் ஆண்களிடம்
    உரக்க சொல்லுவதில்லை
    "ஒழுக்கமாய் நடந்துக்கொள்ள "
    என்று,
    சமூகமே ஏன் ஆண்களிடம்
    உரக்க சொல்லுவதில்லை
    "பெண்ணை சமமாய் மதிக்க கற்றுகொள்ள"
    என்று,
    சமூகமே ஏன் ஆண்களிடம்
    உரக்க சொல்லுவதில்லை
    "பெண்ணின் உணர்வுகளை மதிக்க கற்றுகொள்ள"
    என்று,
    சமூகமே ஏன் ஆண்களிடம்
    உரக்க சொல்லுவதில்லை
    "பெண்களுக்கு உரிமை உண்டு"
    என்று.

    பாலினால் பிரிவினை கொண்டு
    ஒரு பாலின ஆதிக்கம்
    ஓங்க செய்தது
    பார் செய்த தவறோ ?





0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக