• மீள்கிறேன் தினமும்



    மீள்கிறேன் தினமும்

    ஒவ்வொரு நாளும் இரவுகள்
    ஓநாய்களின் ஊளைகளை   விட அதிகமா எண்ணங்கள்
    ஓடுகிறது மூளையில்.

    யாரையும் முகம் பார்த்து கேள்வி கேட்க்க இயலாமல்
    யாரிடம் சொல்வது என்று தெரியாமல்
    என்னிடமே கேட்கிறேன்.
    கேள்வியின் பதில்கள்
    யாவும் நானே.

    மீண்டும் மீண்டும் ஒரே கேள்வி
    பதில்கள் வெவ்வேறு.
    இரவுகள் ஆளும் சிந்தனைகள்
    இன்று நாளை என துரத்தும் கேள்விகள்,
    சுயநலத்தின் உச்சத்தில்
    சுயம் அறிய  ஒரு போராட்டம்.

    இந்த அழுத்தம் எதற்கு
    இந்த கேள்விகள் எதற்கு
    இரவுகள் ஒருபோதும் தூங்க விடுவது இல்லை.

    இசையில் தடுமாறி நிற்கிறேன்.
    இசைக்கும் ஒரு பாடல் ஒரு
    இரவு முவதும்.

    தொடுதிரைகளின் வெளிச்சம்   கண் கூசுகிறது
    தொடர்ந்து வரும் சமூக வலைத்தளங்களின்
    அறிவிப்பு ஓசை மீண்டும்
    தொடுதிரையில் முகத்தை புதைத்து
    தொடுவதில் எல்லா பதிவிகளின் மீது  கேள்விகள்
    தொடுதிரை மெல்ல நகர்கிறது. 

    தூக்கம் என்ற போதையின் விலை என்ன ?
    தூங்காமல் இருப்பது தான் போதையா ?
    துரத்தும் கேள்விகளின் பதிகள் சரியா ?
    தூங்கிய பின் விழித்தால், மீண்டும்
    தூக்கத்திற்கு எங்கே போவேன் ?

    இரவுகள் கடத்துவது
    இந்த யுகத்தை கடத்துவதை விட கடினம் என்றாயின.
    இரவுகளுடன் கொண்ட போர் விடியலில் முடிகிறது
    மீள்கிறேன் ஒவ்வொரு விடியலிலும்
    மீண்டும் மீண்டும் போர் தொடுக்கிறேன்
    மீண்டும் மீண்டும் மீள்கிறேன்
    இந்த இரவுகளிடம் இருந்து.

     
     


        

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக