காதல் தேடிய காலம் போய்
காதலில் காமம் தேடும்
கர்வம் நிறைந்த கண்டம் இது.
வண்ணம் என்னவோ
சாதி என்னவோ
உயரம் என்னவோ
வயது என்னவோ
தேகத்தின் ஈர்ப்பு
புவிஈர்ப்பு விசை விட வேகமாய்
ஈர்க்கிறதா ?
காதலில் காமம் உண்டு
காமத்திலும் ஒரு காதல் உண்டு
இரண்டிற்கும் வேறுபாடும் உண்டு.
காதல் என்ற பெயர் சொல்லி
காமம் தேடி
ஞான படுகையில்
உறை பேசும் வாரத்தைகள் விட
உரைநடையில் பேசும்
வாரத்தைகள் குறைவு.
இன்று வாழ்ந்து பார்ப்போம்
பிடித்தால் வாழ்வோம் இல்லை
பிரிந்து விடுவோம்.
ஒரு இரவு போதும்
காதலும்
கரைந்து விடுகிறது
சூரிய உதையதிற்கு
முன்பு.
இந்த நவீன காதல்
தூண்டிலில்
சிக்கி தவிக்கும்
காதல் விசுவாசிகள்
எத்தனை பேரோ ?
இந்த காம தூண்டிலின்
மறு பெயர்
"லீவ் இன் ரீலஷேன்ஷேப்".
0 கருத்துக்கள்: