• மகிழினி - மகிழ்வித்து வாழ்வாள்


    மகிழினி -  மகிழ்வித்து வாழ்வாள்


    மேகத்தின் கருணை
    மிஞ்சும்
    இவள் அன்பு.

    மழை விதைத்த
    பெரும் துளிகள் 
    இவள் நம்பிக்கை.

    பேசும்  பேச்சில் கனிந்து
    உள்ளம் நெகிழ்வாள்,
    யாவும் புதிதாய் பிறந்திட
    இவளும் புதிதாய்
    கொடுதிட,
    ஒரு யுகம் கூட போதாது
    இவள் குணம் சொல்ல.

    மரம் ,செடி, இயற்கை  இவள்
    தோழிகள்,
    சுற்றமும் இவள்
    பந்தம்,
    என மகிழ்ச்சி படர்ந்து
    உலகம் இவள் உலகம்.

    பள்ளிகளில்  அறிவு தேடல்,
    வயல்களில்  வேளாண்மையில்
    பிணைப்பு,
    இயற்கையின் சொத்துக்கள்
    இவளின் பாதுகாப்பு.

    இவள் பசி கொன்று
    பிறர் பசி தீர்த்து,
    இன்னார் உறவுகள்
    கோர்ப்பாள்.
    உயிர்கள் சிறிதோ  பெரிதோ
    உணர்வுகள் ஒன்றுதான்
    இவள் அகராதி. 

    இன்பமுடன்  இவ்வாழ்க்கை
    இவள் இன்றி
    இயங்கதோ ?
    மகிழ்வித்து வாழ்வாள்
    மகிழினி. 

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக