• மகிழினி- கூட்டாஞ்சோறு

    மகிழினி- கூட்டாஞ்சோறு 


    ஞாயிற்றுக்கிழமை 
    மெல்ல விடிந்தது
    இவள் பொழுதுகள்,
    மேக கூட்டத்தின்
    நடுவே ஒளி வழி
    தேடும் நட்சத்திரம் போல
    வெளிச்சம் கண்டு கண் கூச
    கண்கள் இருக்கி மூடி கொண்டு
    கைகளால்  கசிக்கினாள்,
    கண் திறக்க மின்னும்
    நட்சத்திரமாய் கருவிழிகள்.
     
    காலை பொழுதுகள்
    எப்பவும் போல விரைந்து
    கடிகாரம் பத்து மணி தொட்டது,
    வேலைக்கு புறப்பட்டாள் சக்தி.

    தோழிகளுடன் இன்று
    சமையல் கூற்று,
    இவள் ஏற்றும் கூற்று
    இவளே ராஜபாட்டை.   
    சொப்பு சாமான்கள்
    பளிச்சென்று  மாற்றினால்
    ஒரு தோழி,
    காய்கறிகள் மண் கல் கொண்டு
    வடிவம் கொடுத்தாள்
    ஒரு தோழி,
    தாய் போல சமைக்க
    தன்னை தயார் செய்தாள்
    மகிழினி.

    கற்கள் மத்தியில்
    விறகுகளாய் சிறு குச்சிகள்  தீ மூட்ட,
    பாத்திரத்தில் தண்ணீர் கொதித்தது.
    சிறுகற்கள் தண்ணீரில்
    வெந்து கொண்டு இருக்க,
    பச்சை அரிசியாய்  மண்
    காய்கறிகளுடன் கொதிக்க,
    இலைகள் முன் ருசி பார்க்க
    காத்து இருக்கும் தோழிகள்.

    இலைகளோ பெருசு,
    இவள் வைக்கும் சோறு
    சிறு வெல்ல கட்டி.
    அளவு சரிவர  வைத்தாள்
    ருசி இசைபாடும் தோழிகள்
    எதோ சாதித்த மிதப்பில் இவள். 

    இன்றைய கூற்று
    சுபமாய் நிறைவு பெற்றது
    மகிழினியின் விருந்தோம்பலுடன்


        

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக