• மகிழினி - இருள் நீள பயம்

    மகிழினி - இருள் நீள பயம் 

    சலவை செய்து  வைத்த வானம்
    நட்சத்திரங்கள் இல்லை
    நிலவும் இல்லை
    இமைகளை கயறு கட்டி
    இழுக்கும் தூக்கம்.

    தாய் சக்தியின்
    அரவணைப்பு
    கடவுள் கையில் இருக்கும்
    குழந்தையாய் இவள்.

    கருமேகம் சூழ
    கண்களை மிரட்டும்
    மின்னல்கள்.
    மகிழினி ஆழ்ந்த
    உறக்கம்,
    புருவங்கள் உயர்ந்தது
    முகத்தில் சிறு சிறு
    வடு வடு என சுருங்க,
    உரக்க  சத்தத்துடன்
    இடி இடிக்க,
    அலறி மிரண்டு விழித்தாள்,
    அம்மா அம்மா.....
    அம்மா அம்மா.....

    சக்தி பதற
    விழித்து மகிழினியை
    அணைத்து கொள்ள,
    மகிழினியின்  பயம் கைகளை
    விட விடக்க,
    வார்த்தைகள் திக்க
    வியர்வை  துளிகள் முகத்தில் உதிரா
    தன் முந்தானையை கொண்டு
    முகம் துடைக்க,
    பொலிவு பெற
    மகிழினியை  அணைத்து
    நெஞ்சோடு இறுக
    தட்டி கொடுத்து
    உறங்க வைத்தாள்

    இருள் நீள பயம் சூழ
    சக்தியின் சக்தி இவள்மகிழினி.

     
     
             

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக