• மா.... அம்மா



    மா.... அம்மா  


    குழந்தைங்க செய்யுற தவறுகளை சரி செய்வதில் தந்தையைவிட அம்மாக்கு ஒரு படி அக்கறை அதிகம் இருக்கும் என்றே சொல்ல வேண்டும். பெண்கள் தங்கள் உள்ளுணர்வு எடுக்கும் முடிவுகளே அதிகம் நம்புவர் ஆம் உண்மை தான். ஆண்கள் எடுக்கும் முடிவுகள் கூட தவறு இருக்கலாம் ஆனால் பெண்கள் உள்ளுணர்வு  படி எடுக்கும் முடிவுகள் எப்போவுமே சரியாக அமைந்திடும். 


    மா (அம்மா) குறும்படம்   சர்ஜுன் இயக்கத்தில் இணையத்தை கவர்ந்த இரண்டாவது  குறும்படம். முதல் படம் யாவரும் அறிந்த ஒன்றே "லட்சமி ". இந்த மா குறும்படம் ஏன் அனைவரையும் ஈர்த்தது தொழில்நுட்ப விஷயங்கல் குறை இல்லாத ஒன்று கதை அதன் மூலம் சொல்லவரும் கருத்துக்கள் அதுதான். 


    பெண் குழந்தைகள் 12 வயதிலே பருவம் எய்துவது  வாடிக்கை ஆகிவிட்டது அதற்க்கு பல காரணங்கள் இருக்கும்  அதேபோல் பள்ளி பருவத்தில் காதல் வருவதற்கு பல காரங்கள் இருக்கும் . பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி அவள் கோணத்தில் காதல் எப்படி வயப்படுகிறாள் அதை பற்றிய புரிதல் அருமையாக சொல்லப்பட்டு இருக்கின்றது.  அந்த மாணவி தன்  நண்பன் உடன் கலவி கொண்டு இருக்கிறாள் காலப்போக்கில் அவள் மாதவிடாய் தள்ளி போகிறது. அவள் பள்ளியில் விளையாடும் பொது மயங்கி விழுகிறாள். சக தோழியிடம் மாதவிடாய் தள்ளி போவதை பற்றி கேட்கிறாள்.

                    அவள் அம்மா வீட்டிற்கு அழைத்து செல்கிறாள் இறங்கிய உடனே அவள் விரைந்து செல்கிறாள் பேசின் நோக்கி. வாந்தி அம்மா தலை பிடித்து தாங்க அவள் சொன்ன வாரத்தை "அம்மா நா pregnant  இருக்குறேன் ". சாதாரன  கேள்விகள் எப்போ எப்படி யார் காரணம் அடி உதை . தன் கணவனுக்கு சொல்ல நினைக்க , அம்மா தயங்கி நிற்க சூழல் ஏற்றார்  போல ஆண் பெண் பழகுவதையே எதிர்க்கும் ஒரு மனிதன்.

                    தலை சுற்றி நிற்கிறாள் pregnancy டெஸ்ட் கிட்  வாங்கி வந்து பரிசோதித்து பார்க்கிறாள் "உறுதி"  "ஆம்" என பதில் சொல்ல. நடந்ததை கேட்கும் விதம் எல்லாம் அருமை. அதன் பின்பு  வரும் உரையாடல் நிகழ்வு  மகள்  "நீங்க அழுவதை பார்க்க முடியவில்லை என சொல்லி இப்போ நான் என்ன  செய்ய வேண்டும் என கேட்க்க " அம்மா "செத்து  போ " என்று சொல்கிறாள்.
    இரவு தனி அறையில் மகள்  தற்கொலை செய்து கொள்ளும் கனவு. பதறி  அடித்து வருகின்றாள். மகளுக்கு கரு களைப்பு செய்து முடிவு செய்கிறாள் . பின் மகளை ஊக்கு வித்து  மீண்டும் அந்த குழந்தையை சீராக சிந்திக்கவும் செயலாற்றவும் செய்கிறாள் அம்மா (மா) . இறுதியில் வரும் என் உயிரே பாடல் நெகிழ செய்தது.  


          அதில் சில வசனங்கள் யதார்த்த சூழலின் உச்சம் 

    மகள் அம்மாவிடம் "அம்மா முத்தமும் கலவியும் தான் காதல் என்று நினைத்து விட்டோம் " . இந்த காலத்து  டீனேஜர்ஸ்  மற்றும் இளைஞர்களுக்கு  காமம் தான் காதல் என்று ஒரு பெரிய பொய் சமூகத்தில் திரைபடம் மூலமும் சீரியல் மூலமும் உரைக்க படுகிறது. வேறுபாட்டை இந்த குறும்படத்தில் தாய் உணர்த்துகிறாள். இந்த குறும்படம் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவிடாமல் இருப்பதையும், கவனக்குறைவை மறைமுகமாக சொல்கிறது.

    பின்பு ஒரு தருணத்தில் எனக்கு தம்பி பாப்பா இல்லை அதனால் இந்த குழந்தையை மகள் வளர்க்கலாம் என்று சொல்லும் பொது "குழந்தை பெறுவது என்பது ஒரு தவம். மனம் ,உடல், வயது சீராக இருந்தால் தான் குழந்தை பெற்று எடுக்கவும் முடியும் வளர்க்கவும். இது சரியான வயது அல்ல   "  என்றும் சொல்கிறாள்.
     முற்றிலும் உண்மையான ஒன்று குழந்தை பெறுவது என்பது ஒரு தவம்.

    அந்த தாய் மகளிடம் காட்டும் அரவணைப்பு   அன்பின் உச்சம். பின்பு அவள் செய்த தவறுகளை சரி செய்ய  அவள் துணிவு ஊக்குவிக்கும் போதும் தாய் சற்று தனித்து தெரிகிறாள் ஆம் ஒரு குடும்பத்தில் தாய் என்றுமே தனி சிறப்பு கொண்டவள் தானே.

    இந்த குறும்படத்தின் மூலம் சிலருக்கு சில கேள்வி வரலாம்.

    அப்போ அந்த மகள் செய்தது தவறு இல்லையா ?
    தவறு தான் ,அந்த குழந்தையே உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாள். தாயும்  சரிவர அறிவுரை சொல்லி நல்வழி படுத்துகிறாள். தவறு செய்து விட்டாள் என்று சொல்லி 15 வயதில் திருமணம் செய்து வைக்க முடியுமா.அந்த குழந்தை வாழ்க்கையை சீரழிக்க முடியுமா ? 

    இந்த மாதிரி படம் எடுக்குறதுனால சமூகத்துல பருவ குழந்தைகள் கேட்டு போய்ட மாட்டாங்க  ?
    சமூகத்தில் நடக்கும் கூத்து தான் இது நாகரிகத்தின் போர்வையில் காதல் காமம் வேறுபாடு தெரியாமல் நடக்கும் அவலம் தான் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. இது பருவ வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு ஆன படம் மட்டும் அல்ல பெற்றோர்க்கு  கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

    அது எப்படி அந்த கருவை அழிக்க முடியும் ?
                      பெற்றோர்க்கு தெரியாமல் தான் அழிக்க முடியாது. கரு அழிக்க  படுவதும் அவள் எதிர்காலத்திற்கே.

    இன்னும் ஆயிரம் கேள்விகள் கற்பின் மீது வரும்  பதில் சமூகம் இன்னும் இதை புரிந்து கொள்ளவில்லை என்பதே.   அவள் உடன் இருபவனுடன் உண்மையாக இருந்தால் போதும்.


    மீண்டும் ஒரு கைதட்டல் பெரும் குறும்படம்.    இன்னும் சில கருத்துக்கள் இருக்கலாம். உங்களுக்கு ஏதேனும் கருத்து இருந்தால் கீழே  பதிவு செய்யவும்.  

        






        
       

1 கருத்துக்கள்:

  1. Maniarasan Sivaseran சொன்னது…

    அருமையாக எழுதிறுகிறுறீர்கள்

கருத்துரையிடுக