மௌனக்குரல்
எதோ ஒரு பயம்
பேச வார்த்தைகள்
சேர்த்து கொண்டு இருக்க
சரளமாய் ஒரு குரல்
என் எண்ணங்கள் எல்லாம் வார்த்தைகளாய்,
ஆனால் அருகில் யாருக்கும் கேட்க்கவில்லை
என் உதடுகள் அசையவும் இல்லை
அங்கு ஓங்கி ஒலித்தது
என் மனகுரல்.
சில நேரங்களில்
சில தருணங்களில்
சில கேள்விகளும்,
பதில்கள் ஏராளம் இருக்க
ஏனோ பதில்கள் தடுமாறி
நாவோடு நின்று விடுகிறது,
ஆனால் மனக்குரல் மட்டும்
ஓய்வின்றி பேசிக்கொண்டு இருக்கிறது.
நடக்கும் யாவும் யாதும்
அறியாதது போல
கடந்து போக மூளை சொல்ல
ஏன் என்று கேள்விகேட்டு
அதிகம் பேசுவதும் மனக்குரல் தானே.
இரவுகள் உறங்குவதற்கு
என்று சொன்னார்கள்
ஏனோ என் மனக்குரல்
நினைவுகளுடன் சேர்ந்து
கதை பேசி கொண்டு இருக்கிறது.
கோபம் உச்சம் தொட்டபோதும்
கண்ணீர் என் கண்களில்
வெள்ளபெருக்கு உண்டாக்க
என் மனக்குரல் மட்டும்
வெடு வெடு என பேசிக்கொண்டு இருக்கிறது.
ஒலி ஒளி இரண்டிற்கும்
எந்த நேரமும், இடமும் பாராமல்
அப்படி என்ன பேசுகிறது?
வலிகளின் தாக்கத்தை வேறு
வழி இல்லாமல்
விடிய விடிய பேசுகிறது.
சிந்தனைகள் கேள்விகள்
என ஆக்கபூர்வமாய் பேசுகிறது.
சமூகத்தின் மீதான கோபங்கள்
யாரிடம் பேசுவது என்று
தெரியாமல் பித்து பிடித்து
சினத்துடன் பேசுகிறது.
இயற்கையின் அழகை வர்ணிக்க
சொற்கள் தேடி தேடி பேசுகிறது.
மகிழ்ச்சியின் தருவாயில்
யாரிடம் முதலில் பேசுவது என்று
தெரியாமல் குழப்பத்தில் பேசுகிறது.
மௌனக்குரல் கேட்காமல்
எப்படி இருக்க முடியும்,
வழி தவறி நிற்கும் போதும்
வலி தாங்கி நிற்கும் போதும்
என் செவிகளுக்கு மட்டும்
ஒலிக்கும் குரல்.
மௌனம் தரும் ஆனந்தத்தின்
மனதில் ஓரமாய்
எனக்குள் பேசும் போது
என்னுள் வரும் மாற்றங்கள்
யாவும் அந்த ஓர்
குரலின் பிரதிபலிப்பு
மௌனக்குரல் என் மனக்குரல்
0 கருத்துக்கள்: