மகிழினி - கதை சொல்லும் அழகு
கதைகள் சொல்லும் வகுப்பு,
ஆத்திச்சுடி கதைகளில்
மனதில் பதிவு செய்து
கொண்டாள் மகிழினி.
மாணவர்கள் பட்டியலில்
இவள பெயரோ தராசு போல
நடுவே,
எப்படி ஒப்புவிக்க போறோம்
என்ற பயம்,
கதைகள் அலைகளாய்
மீண்டும் மீண்டும்
முனங்கி கொண்டு இருந்தாள்.
"மா" வரிசையில் இவள்
முதல் பெயர்,
ஆசிரியர் அழைக்க
பதற்றத்துடன் விரைந்தாள்.
காதுகள் அருகில் ஓடும்
அருவி ஒன்றை
கைக்குட்டையை கொண்டு
நிறுத்தி,
மெல்ல பருகா விஷம் போல
முழுங்கிய ஒரு குளம் நீர்,
விழிகள் திறந்து
வகுப்பறை ஒரு நோட்டம் விட்டபின்
வார்த்தைகள்
வகுப்பறையில் ஒலி பெருக்கி
வைத்தது போல கேட்க்க,
கதையை கைகளால் வர்ணிக்க
கண்கள் உடன் சேர்ந்து இசைபாட,
கைதட்டல்களுடன் நிறைவு
செய்தாள்.
மகிழினி - இவள் பேசும் அதிகாரம்.
0 கருத்துக்கள்: