• மகிழினி - பூங்கொத்து



    மகிழினி - பூங்கொத்து 

    தெரு நண்பர்களுடன்
    பள்ளி செல்கிறாள் தேவதை.
    அன்று,
    உலக சுற்றுச்சூழல் தினம்,
    மரம் வளர்ப்போம் என்று
    பூச்செடிகள் வழங்கியது
    பள்ளி.

    இவள் கைவசம் இரண்டு
    செடிகள்,
    பெயர் எழுதவில்லை.
    ஒரு வித மகிழ்ச்சியுடன்
    வீட்டிற்கு
    எடுத்து வந்தாள்.

    தெரு தொடங்கும்போதே
    "அம்மா" என
    ஊரை எழுப்பிவிட்டு
    வருகிறாள்.

    உன் சத்தம் ஊருக்கே
    கேட்குது,
    என்ன என்று கேட்டால்.
    கதைகள் விவரித்து
    எங்கு வைக்குறது என்று கேட்டால்
    வினவினாள்.

    சக்தி உதவியுடன்
    தன் அழகு வீட்டிற்கு
    முன்புறம் வைத்து
    இன்னும் கொஞ்சம் அழகு
    செத்தாள்.


    ஒரு கேள்வி அது என்ன
    செடி என்று.
    சக்தியோ பூக்கும் போது
    தெரிந்துக்கொள் என்றாள்.

    தினம் ஒரு ஆர்வத்துடன்
    காலை எழுந்தவுடன்
    கொஞ்சம்  நீர்,
    மாலை பள்ளி
    முடிந்தவுடன் கொஞ்சம் நீர்.

    ஒரு மாதம் ஓடியது,
    ஒரு சிறிய மொட்டு,
    இவள் கண்ணம் போல
    ஒன்று வெள்ளை,
    மற்றொண்டும் வெள்ளை. 

    அன்று பூத்தது,
    வெள்ளை ரோஜாக்கள்.
    காலை எழுந்து இவள் பார்த்த
    முதல் பார்வையும்
    அந்த பூ தான்.
    என் வீட்டில் பூக்கள் பூத்தது
    என சுற்றி திரிந்தாள்.

    பள்ளி முடிந்தது
    விரைந்து கால்கள்,
    தன் மெல்லிய விரல்களால்
    மெதுவாக முற்க்கள் இடையில்
    பிடித்து ஒடித்து 
    பூவை கொய்தாள்.
    பூச்சூடி கடை தெரு வலம்
    வந்த ஆழகிய தேர்.
    மகிழினி
         


0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக