மகிழினி - தெருகூத்து
மார்கழி திருவிழா,
கலைக்கட்டியது கோவில் தெரு
மகிழினி மகிழ்ச்சி உச்சத்தில்
இதுவே இவள் காணும்
முதல் திருவிழா.
புத்தகங்களும் செவி வழி
கேட்ட கதைகள்
இவள் தெருவில் பார்த்த
ஒரு தெரு கூத்து.
கூட்டத்தில் மூன்றாம் வரிசையில்,
சிவப்பு துணி திரை,
ஒரு ஒரு ஊர் அதிரும் குரல்
மெல்ல திறந்து திரை,
அமைதி,
சற்று என்று கூட்டத்தில்
பரவியது.
தோழியின் குரல் எங்கோ கேட்க்க
திரும்பி திரும்பி பார்த்தால்,
அருகில் இடம் கேட்க்க
வெகுளியாய்
வா வா என
கை அசைத்தாள்.
வண்ணங்கள் விளையாடும்
அழகான முகம்,
வியந்து பார்த்தாள்.
கண்களுக்கு பொருந்தும்
மை போல உவமையாய்
ஒவ்வொரு அசைவும்.
கதையோடு ஒன்றிய இவள்
நகைத்தாள் ஒவ்வொரு நொடியும்
சற்று என்று ஒரு சொட்டு கண்ணீர்,
கலைஞன் கலை இவள்
நவரசம் வெளி வர
வியந்தாள் மகிழினி.
திருவிழா திரை மூட
தாயுடன் பெருமிதமாய்
வாங்கிய பொம்மைகளுடன் வீடு
திரும்பினாள்.
0 கருத்துக்கள்: