• மகிழினி - புதிதாய்ப் பிறப்பாள்

    மகிழினி - புதிதாய்ப் பிறப்பாள்

    எழுத படாத புத்தகத்தின்
    முதல் வார்த்தையாய்
    இவள் புதிதாய் பிறப்பாள்.

    விடிந்ததும் பனியால்
    புல்லின் மேல்
    உருவான பனித்துளி
    உடையும் போதும்
    இவள் புதிதாய் பிறப்பாள்.

    கண்கள் மூடி திறந்து 
    விழிகள் குவியம் கொண்டு
    கண்ணாடிப் பார்த்து
    மை பூசும் போது
    இவள் புதிதாய் பிறப்பாள். 

    கங்குகள் வெப்பம் தணியும்
    முன்பு தெளிக்கும்
    தண்ணீர் அதன்
    புகை
    காற்றில் மறையும் போது
    இவள் புதிதாய்ப்  பிறப்பாள்.


    வறண்ட நிலம்
    வானம் பார்க்கும்  போது
    வரும் முதல்
    மழை துளியாய்
    இவள் புதிதாய்ப் பிறப்பாள்.

    எதையும் ஏலனமாய் பேசும்
    சமூகத்தில்
    வார்த்தைகள் வற்றிய பின்பு,
    இவள் புதிதாய் பிறப்பாள்

    மாதம் உடையும்
    கரு முட்டையின்
    கடைசி சொட்டு இரத்தம்
    சொட்டியபின்பு
    இவள் புதிதாய் பிறப்பாள்.
     
    இவள் புதிதாய் பிறக்கும்
    ஒவ்வொரு நொடியும்
    இவள் பேசும் அதிகாரம்,


     

1 கருத்துக்கள்:

  1. Unknown சொன்னது…

    அருமையாக உள்ளது சகோதரர்😀

கருத்துரையிடுக