• நினைவுகள் சொல்லும் கதைகளுடன்


    நினைவுகள் சொல்லும் கதைகளுடன் தூரம் சென்ற பின்பும் தூங்கா நினைவுகள் துயில் எழுப்பி பேசுகிறதே. என்றோ சொன்ன வாரத்தைகள் என்றோ நடந்த நிகழ்வுகள் என்றோ எடுத்து கொண்ட புகைப்படம் என்றோ ஒரு நாள் சேருவோம் என்ற நம்பிக்கை என்றோ காற்றில் தொலைந்ததே. வர்ணனை கொண்டு காதல் சொல்ல உணர்வுகள் இலக்கியம் இல்லை உணர்வுகள் கொண்டு உன்னை வர்ணிக்க இலக்கணம் போதவில்லை. நாளை பேச என்ன இருக்கிறதோ இன்றே பேசி தீர்த்துவிடுவோம் மீண்டும் நாளை புதிதாய் பேசுவோம் என்று சொன்ன பின்பும், இன்றும் தனியாய் பேசிகிறேன் உன் நினைவுகளோடு. துன்பங்கள் துரத்தும் வேளையில் தூங்காது துவண்ட உன் வாழ்க்கையில் துருவமாய் துணை நின்றேன். நொடிகள் தந்த துன்பம் நெற்றியில் நீ கொடுத்த முத்தம் நேற்று போல் இன்றும் சுவடுகள் ஈரப்பதமாய் உணர்கிறேன். இறுக்கி பிடித்த கையில் இறுகி சேர்ந்த கை ரேகைகள் இனியும் பிரிவு இல்லை என்று சொல்லுமா ? பிரிவுகள் இன்றி வாழ்க்கையும் இல்லை பிரிந்த பின்பும் காதலிக்கும் வாழ்க்கையும் என்றும் சுகமே உன் நினைவுகள் சொல்லும் கதைகளுடன் காதலர் தினம் எந்நாளுமே

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக