• வகமான்

    வகமான் 



    இயற்கையின் கரு
    காற்றை நுகர்ந்து 
    மலை மழை மாலை 
    மேகத்தின் மோகம்
    கை வீசி நகரும். 

    புல் பனி மீது தொடுத்த 
    தீண்டாமை போர்,
    மழை நீரின் பாசம் 
    மண்ணுடன் பாதம் 
    கொண்ட நேசம்,
    நொடிக்கு நொடி மாறும் 
    வெயிலின் குணம்.

    கடிகாரம் சோம்பல் 
    கொண்டது, 
    இயற்கை புத்துணர்ச்சி 
    தந்தது. 

    நடக்கும் பாதைகள் 
    தூரம் அதிகம்,
    கால்கள் சலித்து கொள்ள 
    விரும்பவில்லை.

    கலியுகம் தந்த டிஜிட்டல்
    செல்லாத காசாக மாறியது, 
    கால சுவடுகளில் எழுத பட்ட 
    நினைவுகள்.
      
    பரிச்சியமாய் போன 
    நட்பு சொந்தங்கள்,
    சுவாரசியமான 
    கதைகள்.


    மீண்டும் ஒரு பயணம்,
    ஆசைகள் துறப்போம்,
    கனவுகள் மெய்பிப்போம் .




0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக