• மகிழினி - மகிழ் மொழி

    மகிழினி - மகிழ் மொழி 

    நிலா மகள்
    நினைவில் கொண்டு
    நிதானமாய் பேசிய
    நிகழ்வு

    செய்கையில் முதிர்ச்சி
    பெற்று,
    ஒற்றை எழுத்து
    ஒலிபெருக்கியது
    அவளில் முதல்
    பயிற்சி.

    பிணி ஓட்டுமாம்
    பிதா என்று முதல்
    வார்த்தையாய் முத்து
    சிந்தினால்,
    ஆம் அவள்
    பிணி பிதா தானே.

    சக்தி மழலை மாறாமல்
    சொல்ல ,
    மகிழினி
    அச்சு அசராமல்
    மெல்ல
    உதிர்த்தால்
    "அம்மா"
    என்று.

    அழகு குரல்
    மீண்டும் மீண்டும்
    அழைத்தாள்,
    கோடி   முறை
    கேட்பினும்
    இன்பம்  குறையுமோ ?


    அவள் முனைந்த
    ஒரு சொல் கவிதை
    "அம்மா"
    இவள் பேசும் மகிழ் மொழி
    இவள் மகிழினி.



0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக