மகிழினி - ஏட்டு தொடும் முன் ஏக்கம்
கோவில் திருவிழா,
தெருவீதி கடைகள் அருகில்
தெருகூத்து.
பொம்மைகள் வியந்து பார்த்த
அழகு பொம்மை,
இவள் கூர்ந்து பார்க்கும்
ஒரு மர கிலுக்கு
அதன் ஓசை.
இவள் வயது உறவு,
தன் தந்தையிடம்
பொம்மை கேட்க்க,
இவள் மனதில் உதிக்கும்
ஒரு நொடி ஏக்கம்.
சிறு பிள்ளை,
இவள் கேள்விகள்
சிறிது அல்ல
அதன் விடை விளங்கும்
நாள்
வெகு தொலைவில்,
அக்கணமே
இவள் சக்தி இவளுடனே.
ஏக்கம் போக்கும்
ஏட்டு படிப்பு,
எட்டா தூரம் இல்லை
எல்லாம் பெற
எண்ணற்ற நேரம் உழைக்கும் சக்தி
என்றும் அவள் கையில்
என்றோ நிலைமை மாறும்
ஏட்டு தொடும் முன்
ஏக்கம் கொண்டவள் இவள் - மகிழினி.
0 கருத்துக்கள்: