• மகிழினி - அழகு பொம்மை



    மகிழினி -  அழகு  பொம்மை

    புதிதாய் சில குரல்கள்
    விழித்து
    பார்த்தாள்.

    கருவறையில் கேள்விப்பட்ட
    காதாபாத்திரங்கள்
    இங்கு
    அவள் முகம் பார்த்து
    ஜாடையை அலசி
    கொண்டு
    இருக்கிறது.

    அவள் கண்
    சிமிட்டி சிமிட்டி
    பார்த்தாள்
    சிரிக்க மனம் இல்லை
    இன்று போல்
    நாளை என்னை பற்றிய
    ஆசை வார்த்தை கேட்பேனா?
    அழுகுரல்,
    தாய் சக்தியின்
    கையில் தவழ்கிறாள்
    இப்போது.

    பசி பசி
    இவள் குரல் பலரையும்
    பயந்து ஓட செய்தது,
    கைகிடையில்  காற்று
    நுழையாமல்
    கண்களை இறுக்கி
    மூடிகொண்டு அழுகிறாள்.

    ஒரு பெருமூச்சுடன்
    பசி போக்கினால்,
    விழித்து
    தாயின் முகம்
    பார்த்தாள்
    அழகு  பொம்மை
    இவள் - மகிழினி






0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக