• மகிழினி - பவனி வரும் தேர்


    மகிழினி - பவனி வரும் தேர்

    மார்கழி குளிர்
    மாலை வேலை
    நட்சத்திரம் காண
    மெல்ல அடி
    எடுத்து வைத்தாள்.

    நீரோடு நகரும் இலை
    போல அவள் வருகிறாள்,
    தாமரை இதழ்
    பாதம்.

    மாலை குயில்களை
    மிஞ்சும் கொலுசு
    சத்தம்.

    ராகம் பாடும்
    கம்மல்,
    வண்ணம் பேசிடும்
    கரு "மை"  அவள்
    கண்கள்.

    பட்டுபூச்சிகள் வெட்க
    படும் நேரம்,
    அவள் அணிந்து வந்தது
    ஆரணி பட்டு.

    காற்றை எதிர்த்து
    போர் தொடுக்கும்
    மகிழ்.

    செவி கேளாது
    சேவகி செயல்
    நோக்கி,
    "அம்மா" என்று
    நகர்ந்து வரும்
    பவனி தேர்
    இவள் மகிழினி.










0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக