ஆசை அது
உனக்கு
தேவை இல்லாத
ஒன்று
கனவுகள் காண
உனக்கு
உரிமை இல்லை
ஏனோ நான் என்ன
ஆகா வேண்டும்
ஊர் சொல்ல்கிறார்கள்
ஆசை படுவதிற்கும்
சாதி அடிப்படை
தேவை என்பது
எனக்கு
யாரும் சொல்லவில்லை
கட்டு கதைகள்
எழுதபடுகின்றன
கட்டு கட்டாக
இல்லாததால்
இன்று இல்லையேல்
நாளை
என்கிறார்கள்
இது இல்லையேல்
வேறு என்று
கனவுகளை
மாற்றி அமைக்க முடியாது
இன்று உண்ணவில்லை
என்றால் நாளை
என்று யாரும்
எண்ணுவதில்லை
ஆசையை கனவுகளாய்
மாற்றி
காற்றில்
பறக்க விடும்
வினோத அரசாங்கம்
ஒருவரின்
ஆசை கனவுகள்
முடக்கபடலம்
கோடிகளின்
ஆசை
புதைப்பது கடினம்
புதைக்கவும் முடியாது
கனவுகள் பெட்டகதில்
போட்டு அழகு பார்ப்பதற்கு அல்ல
வெற்றி காற்றோடு
உணர வேண்டியது
உணரபடும் நேரமும்
வெகு தூரம் இல்லை
உணர்த்தப்படும் நேரமும்
வெகு தூரம் இல்லை
மீண்டு வருவேன்
ஒரு மருத்துவராய்
அன்று
இந்த உலகம்
சாதி பிணைப்புகள் இன்றி
கல்வி தரம் உயர்ந்து
புது உலகமாய்
இருக்கும்
அன்று
"அவள் ஒரு மருத்துவர் "
என்று ஊரு சொல்லும்.
0 கருத்துக்கள்: