தேடல்
கடிகாரம் தேம்பி தேம்பி
அழுது கொண்டு
எழுப்பும் வழக்கம்
மாறி
இயற்கை சேவகர்கள்
எழுப்பும் ஒரு
வாழ்க்கை தேடி...
காற்றை நுகர்வதர்க்கு
முகமூடி பயன்படுத்தும்
வழக்கம் மாறி
இயற்கையின் குழந்தை போல
நுகர்ந்து புத்துணர்ச்சி
பெரும் வாழ்க்கை தேடி...
நோயின் பெயர் என்ன
என்ற ஆராச்சியில்
வைத்தியம் என்ற பெயரில்
மாய்ந்து போகும்
ஒரு உலகம் கடந்து
நலம் குன்றாத வாழ்க்கை தேடி...
பயிர்கள் வாடும் கொடுமையை
பார்த்தும் கலப்பட உணவுகளை
உண்ணும் புத்தி மங்கிய
சமுதாயம் கடந்து
இயற்கை விவசாயம் தரும்
ஒரு ஆரோக்கிய உலகம் தேடி...
காசுக்காக கல்வியயை விற்கும்
அவல நிலையில் இருந்து
அறிவும் ஆற்றலும் இலவசமாக கிடைக்கும்
ஒரு அறிவியல் உலகம் தேடி...
சுயநல மேதைகள்
வாழும் வாழ்க்கை சூட்சமம்
கடந்து
பொது நலம் கொள்ளும்
மக்கள் நிறைந்த உலகம் தேடி...
இந்த தேடலின் முடிவே
ஒரு தேடல்....
0 கருத்துக்கள்: