• சாராஹாஹ்



    சமூகத்தில் சாரல் சலனம்
    சமுகத்திற்கு  ஒரு முகம்
    சமூக  வலை தளங்களில்
    ஒரு முகம்

    யாரும் அறிந்திடாத ஒரு முகம்
    யாரு என்று அறிய தூண்டும் ஒரு மனம்

    கேலிகள் ஏராளம்
    கேள்விகள் ஏராளம்
    கேட்டவர் யாரோ
    கேட்பது யாரோ

    நீ தான் என்று தோன்றும்
    ஆனால் நீ தான் என்று
    சொல்ல முடியாது

    நான் தான் என்று
    ஒப்புக்கொள்ள தோன்றும்
    ஆனால் சொல்ல முடியாது

    சஹாராவில் தேடும்
    பேரீச்ச மரம் போல
    முகவரி தேடி சாராஹாஹ்வில்
    தொலைந்து விட்டோம்.

    முகம் கொடுத்து பேச
    நேரம் இல்லை
    முகம் மறைத்து பேசிட
    சுவாரசியம் உண்டோ ?

    சுவாரசியத்தின் உச்சியில்
    சாதாரண உறவுகளை
    இழந்தவர்கள்.


    சாராஹாஹ் சைபர்புல்லிங்
    தொடக்கமோ ?
    நினைவுகள்
    சேகரிக்கும் டிஜிட்டல்
    தபால்  பெட்டியா ?


0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக