• யார் பிழை ?



    கனவுகள் மெய்பட
    கனவாய் மாறும்
    வாழ்க்கை
    யார் பிழை?

    கை கோர்த்து
    காலம் கடத்த வேண்டிய
    நேரம்
    கைகள் ஏந்தியது
    யார் பிழை ?

    விதியின் விளையாட்டு
    என்று நினைத்து
    உண்மை மறைப்பது
    யார் பிழை ?


    துன்பத்திலும் இன்பம்
    தருவது
    யார் பிழை ?


    கருவுற்று
    பெற்று
    பேணி
    வளர்த்து
    அடையாளம் தந்தவரின்
    அடையாளம்
    அழிக்க நினைத்தது
    யார் பிழை ?


    உண்ணும் உணவில்
    ருசி கண்டதில்லை
    உடல் காக்கும்
    மருந்தும் தேவை இல்லை
    நிம்மதி தேடுவது
    யார் பிழை ?


    வீதியில் எத்தனை உள்ளங்களோ
    உறவு இன்றி  எத்தனை உள்ளங்களோ
    இது யார் பிழை ?

    இருந்தும் இறந்தும்
    யாவும் யாரும்
    அறியாதாது
    யார் பிழை ?


    எழுத்துக்கள் 
    கற்று கொடுத்து
    எழுத
    கற்று கொடுத்து
    எழுந்து நிற்க
    கற்று கொடுத்து
    அறிவு மை ஊற்றி
    எழுதுகோல்
    எழுதி விதி
    அதை மாற்றாமல்
    விதியின்   மீது
    பழியிட்ட
    அந்த
    எழுதுகோலின் பிழை.


    இந்த எழுதுகோலின்
    எழுத்துக்கள்
    கடவுள் படைத்த
    சுயநலத்தின்
    கைகளால்
    எழுதப்பட்ட
    வரிகள்.


0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக