• நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கா ?



    நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கா?


    “இன்று மத்திய அரசு உழியர்கள் வேலை நிறுத்தம்,ஆங்காங்கே தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை” என்ற செய்தி சற்றும் எதிர்ப் பார்க்கவில்லை, முன்னதாகவே முடிவு செய்து விட்டேன் இன்று ஊருக்கு போக வேண்டும் என்று. காலை உணவுக்கு பின் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் வந்தேன். பத்து நிமிட காத்திருப்பிற்கு பின் ஒரு பேருந்து ஏறினேன். சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு பெண் ஏறினார். அந்த பெண் பார்பதற்கு உடல் பருமன் கொண்டவராக இருந்தார் வயது முப்பது கடந்த தோற்றம். உள்ளே வந்த அந்த பெண் சுற்றி சுற்றி பார்த்து என் அருகில் உள்ள இருவர் இருக்கையில் சன்னல் இருக்கையில் அமர்ந்தார். அந்த பெண்ணிற்கு எதையாவது வாங்க வேண்டும் ஆனால் பேருந்து புறப்பட நேரம் இருந்தும் இறங்கி போய் வாங்க விருப்பம் இல்லையா அல்ல ஏறும் முன்னே வங்கி கொண்டு வந்து இருக்கலாம் ஆனால் இந்த இரண்டும் அவள் செய்யவில்லை. இருக்கையில் அமர்ந்த இரண்டு நிமிடத்தில் சன்னலை திறந்து வைத்து கொண்டாள் பின்பு அந்த சன்னல் பக்கம் வரும் சிறு விற்பனையாளர்கள் பார்த்து கொண்டு இருந்தாள். முதல் மக்க சோளம் விற்கும் ஒரு நபரை அழைத்தாள் 


    பெண்: “நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கா?”
    வியாபாரி: “இருக்கு அக்கா சோளம் வேணுமா?”
    பெண்: “முதலில் சில்லறை எடு”
    வியாபாரி: “பாருங்க இருக்கு சோளம் வேணுமா ? ”
    (அந்த பெண் நூறு ருபாய் எடுக்கவில்லை, சோளத்தை ஒவ்வொன்றாக வாங்கி நல்ல சோளமா என்று பார்க்க ஆரம்பித்தாள்.)
    பெண்: “எல்லாம் பழைய சோளம் போல இருக்கு வேண்டாம்”
    (சரி நான் கூட சோளம் நல்லா இல்லை போல அதான் வேண்டாம் என்று சொன்னார்கள் போல என்று நினைத்தேன்)

    பேருந்து புறப்பட்டது பரனூர் சுங்கசாவடி நின்று, பொறுமையாக சென்றது. 


    ஓடி கொண்டே ஒரு ஒருவர் “மல்லாட்ட வேண்டுமா அவிச்ச மல்லாட்ட” அவரையும் அழைத்தாள்  
    பெண்: “நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கா?”
    வியாபாரி: “இருக்கு அக்கா மல்லாட்ட வேணுமா?” (பேருந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது அந்த வியாபாரியும் ஓடி கொண்டே கேட்கிறார்)
    பெண்: “முதலில் சில்லறை எடு”
    அந்த வியாபாரி எடுக்கும் நேரம் சுங்க சாவடி பாதி பேருந்து கடந்தது. மீண்டும் வேண்டாம் என்றாள். சரி பேருந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது அதனால் வேண்டாம் என்று சொன்னார் போல என்று நினைத்து கொண்டேன்.
    மீண்டும் பேருந்து மேல் மருவத்தூர் பேருந்து நிலையத்தில் நின்றது. ஒரு பெண் முறுக்கு எடுத்து கொண்டு வந்தாள் அவர்களிடமும் அதே கேள்வி
    பெண்: “நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கா?”
    வியாபாரி: “இருக்கு அக்கா முறுக்கு வேணுமா?”
    பெண்: முதலில் சில்லறை எடு”
    பின்பு வேண்டாம் என்று சொன்னார்.
    எனக்கு  ஒன்றும் புரியவில்லை.(ஏன்டா நீ இதை எல்லாம் கவனிக்கிற என்று உங்களுக்கு கேட்க தோன்றும் என்ன செய்வது அந்த பெண் பேசுவது பேருந்திற்கே கேட்கிறது )
    ஒருவழியாக திண்டிவனம் வந்தது. அந்த பெண் முதலில் இருந்து ஆரம்பித்தாள்
    பெண்: நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கா?
    வியாபாரி: இருக்கு பழம் வேணுமா?
    பெண்: முதலில் சில்லறை எடு.
    வியாபாரி: முதல கொடுங்க இந்தாங்க சில்லறை எண்பதுரூபாய்.
    பெண்: இது சுவையாய் இருக்குமானு தெரியல.
    ஒருவழியாக அந்த பெண் வியாபாரி சாமர்த்தியம் விற்று விட்டாள்
    வியாபாரி: எல்லாம் நல்ல பழம் தான்
    பெண்: இதில் எண்பது ரூபாய் சில்லறை இருக்கா ? இருக்கிற மாதிரி தெரியலையே ? (சிரித்து கொண்டே கேட்கிறார்)
    வியாபாரி: சரியாதான் இருக்கும்


    இந்த நிகழ்வில் மனிதம் எங்கே போனது ? அந்த பெண் நல்ல பொருள் வாங்க வேண்டும் என்று நினைப்பது சரி ஆனால் அதற்க்கான சூழல் அங்கு இல்லை இருந்தாலும் அவர் செய்கை மனிதம் அற்றே இருந்து. பயணத்திற்கு முன்பு அந்த பெண் சில்லறை மாற்றி இருக்கலாம் ஆனால் மாற்றவில்லை ஏன் மாற்றவில்லை  என்று நமக்கு தெரிய வாய்ப்பு இல்லை. சரி விடுவோம் ஒரு வியாபாரி ஒரு பழம்/பொட்டலம் விற்க பேருந்து பின் ஓடி கொண்டு இருக்கிறான் அவர்களிடம் அந்த பெண் வாங்க நினைப்பது சரி ஆனால் வாங்கும் முறை சரி இல்லை. 


    நகரும் பேருந்து கூடவே ஓடி வரும் அவர்களிடம் வாங்க நினைத்தால் சாரியான சில்லறை கொடுத்து வாங்க வேண்டும். ஏன் என்றால்
    -எங்கு சில்லறை தருவதற்குள் பேருந்து கிளம்பி விடுமோ என்ற பயம்.
    -எங்கு அவர்கள் ஏமாற்றி விடுவார்களோ என்ற பயம்.
    அப்படி சில்லறை இல்லை என்றால் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து வாங்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் பயணத்திற்கு முன்னே எல்லாம் வாங்கி கொண்டு வர வேண்டும்.
    அந்த பெண் விசாரித்தது எல்லாம் சரி ஆனால் அவர் ஒரு பேருந்தில் அமர்ந்து கொண்டு செய்கிறார். ஆனால் அந்த வியாபாரி பேருந்துடன் ஓடிகொண்டே வியாபாரம் செய்கிறார்கள்.(இதை அவர்கள் தொழில் இதில் என்ன இருக்கு என்று நினைகாதிர்கள் ) அவர்கள் மீது கொஞ்சம் மனிதம் கொண்டு நடந்தால் நன்றாக இருக்கும். அந்த பெண் ஒரு ஏலனமாய் சிரிப்பு சிரித்து கொண்டே உரையாடியது தான் இந்த கேள்வியை என்னுள் கேட்டது “ஏன் அந்த பெண் மனிதநேயதுடன் நடந்து கொள்ளவில்லை ?” அந்த பெண் சில்லறை மாற்றும் இடம் சூழல் அங்கு இல்லையே. ஒரு நிமிடம் அந்த பெண் வியாபாரியாகவும் உள்ளே இருப்பவர் அந்த பெண் நடந்து கொண்டார் போல வேறு ஒருவர் நடந்து கொண்டால் அந்த பெண்ணிற்கு எப்படி இருக்கும். இது அந்த பெண்ணை குறை சொல்லுவதற்கு இல்லை அந்த பெண்ணை போன்ற சில ஆண் பெண் இருபாலரும் பிறர் நிலை புரிந்து கொள்வதற்க்காக மட்டுமே. இதை அந்த வியாபாரிக்காக பேசுவதாக எண்ண வேண்டாம் அவர்களில் சிலர் உண்மைத்தன்மை இல்லாமல் தொழில் செய்வதே இந்த நிலைக்கு காரணம். எந்த நிலையிலும் ஒருவர் மற்றவர் சூழல் புரிந்து நடந்து கொண்டால் எல்லாம் எளிதாய் முடிந்து விடும்.   



    ---------------------------------
    உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.  
                  

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக