தீரா காதல்
என்னை கண்டதும்
ஓடி வரும் நாய்குட்டிகள்
மீது தீரா காதல்.
அழகிய மலையில்
உச்சியில் நின்று
பார் ரசிக்கும் வேளையில்
என்னை தீண்டாமல்
தீண்டி செல்லும் மேகத்தின்
மீது தீரா காதல்.
அரச மரம் நிழலில்
அமைதியாய் யோசிக்கும் வேளையில்
தெள்ள தெளிவாய் கேட்கும்
பறவைகள் எழுப்பும் சத்தம்
மீது தீரா காதல்.
ஆராவாரமின்றி சின்ன சின்ன
சல சலப்புடன்
காலை வருடி செல்லும்
நதியின்
மீது தீரா காதல்.
வயல் வெளியில்
கம்பீரமாய் நிற்கும்
பயிர்
அந்த பசுமை
மீது தீரா காதல்.
நடக்க நடக்க
கால் தடம் பதிய
நிமிடத்திற்கு பல முறை
அதை அழித்தாலும்
என் பாதம் வரையும்
கடற்கரையின்
மீது தீரா காதல்.
மழலை பேச்சிலும்
அசட்டு சிரிப்பிலும்
எப்போதும் ஆனந்தம் தரும்
சுட்டி குழந்தைகள்
மீது தீரா காதல்.
தனிமையில் இனிமை
சிந்திக்க புத்துணர்ச்சி தரும்
இரவின்
மீது தீரா காதல்.
தீரா காதல்
என்றும் நினைவுகள் தரும்
புன்னகை
மீது தீரா காதல்.
இந்த
வாழ்க்கையின்
ஒவ்வொரு நொடியிலும்
ஏதோ
ஒன்றின் மீது தீரா காதல்.
0 கருத்துக்கள்: