• விவசாயி



    கடன் பெற
    கால் கடுக்க நின்னேன்
    கால்வயித்த  நிரப்பி
    காலம் பார்த்து பயிர் போட்டேன்
    காலாண்டு மழையும் இல்ல,
    கருகி போன பயிர் பார்த்து
    கதறி அழ கண்ணீரும் இல்ல
    காணாத துயரம் எல்லாம்
    கண்முன்னே நடக்க
    காது இருந்தும் செவி சாய்க்க முடியலையா
    காசு கொடுத்து வாங்கிடலாமுனு
    கவலை இல்லாம இருக்குறிங்களா
    காலடி நிலம் கூட மிஞ்சலையே
    கார் போக வேணும்னு கையக படுத்துறாங்க
    காசு கொடுக்குறோம் கொடுத்தா என்னனு கேட்குறாங்க
    காலம் காலமா  விவசாயம் பண்ணுறேன்
    கால்வயித்த நிரப்ப
    கால் கடுக்க நிக்குறேன்
    கண்ணுக்குள்ள நிக்குதே வயல், எல்லாம்
    கனவா போனதே,  நெஞ்சு அடச்சு சாகுறேன்
    கழுகு கொத்தி தின்னுதே. 

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக