• உளவியல் மாற்றம்



    உளவியல் மாற்றம்

    என்னை ஆட்கொள்ளும்
    போதை என் சிந்தனை
    எந்நேரமும் நீரோட்டம்
    போல் ஓடி கொண்டே இருக்கிறது
    அதை வடிவம்
    கொடுக்க மட்டும்
    அவை மறுக்கிறது.

    நோய்கள் என்னை மிகவும்
    மாற்றுகிறது
    சிதைக்கிறது
    தேடும் யாவும் தேடி கிடைக்கும்
    வேளையில் எங்கோ
    விதி தடுக்கிறது
    தனிமையும் வேண்டும்
    உறவுகளும் வேண்டும்
    சமுகத்தின் மீதான அக்கறையும்
    அதில் சுயனத்தில் வாழும்
    மனிதர்கள் மீதான வெறுப்பும்
    என்னை ஏனோ என் சிந்தனைகள்
    சிதைத்து கொண்டே இருக்கிறது.

    மனிதர்களை உற்று நோக்கி
    பின்பு அவர்களிடம்
    இருந்து விலகி செல்கிறேன்.

    அனுதாபம் இன்றி
    என் நிலை புரிந்து கொள்ள
    முன்வருவோர் யாரும் இல்லையே
    என்ற வருத்தம்
    ஒரு வித மன அழுத்தம் என்றனர்.

    உளவியல் சொல்லும்
    காரணம் ஏராளம்
    உண்மை யாதெனில்
    உயிர்ப்புடன் வாழ
    அன்பு இன்றியமையாது என்பதே.

    தினம் தினம் இறந்து
    பிழைக்கும் போது
    நாளை விடியல் துயில் எழுப்பாமல்
    உயிர் நின்றால்
    எப்படி இருக்கும் என
    சிந்திக்க தோன்றுயது.

    வாழ்க்கை மீதான ஆசை மறைந்து
    இறப்பின் மீதான ஆசை வருவது தான்
    வாழ்க்கையின் நிதர்சனமோ !

    இந்த உளவியல் மாற்றம்
    என்னை கோவக்காரனாக மாற்றியது
    என்னை கோழையாக மாற்றியது
    என்னை நம்பிக்கையற்றவராக மாற்றியது
    என்னை ஒரு அறையில் சுருக்கியது முட்டாளாக மாற்றியது
    என்னை உணர்வில் வலிமையற்றவனாக மாற்றியது
    ஏனோ என்னை தேடும் நானாக மாற்றியது
    இந்த உளவியல் மாற்றம்.


           

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக