நான்கு சுவருக்குள்
முட்டாள்கள்
சுழற்றி சுழற்றி
சுவாசித்து வாழு
குளிர் சாதனா அறை.
கண்கள் கணினி
பார்த்து பார்த்து
கருவளையம் தந்த
வேளை.
சோகம்
சந்தோசம்
கோவம்,
என அனைத்தும் பகிர
சமூக வலைதளங்கள்.
கண்ணாடி வெளியே
நடக்கும்
நிகழ்வுகள்
எல்லாம் ஒரு செய்தி.
நாளை குடிக்க தண்ணீர்
கிடைக்குமா ?
என தெரியாமல்
அடுக்கு மாடியில்
குடிபுகும் நாகரிகம்
எவர் உழைப்பு என்று
தெரியாமல்
அவர்களையே
சமூகத்தில் வாழ தெரியாதவன்
என்று சொல்லும்
அதி புத்திசாலி பேச்சு.
தான்
தன்
என்று ஊறி போய்
வாழும் சுயநல
வாழ்க்கை.
தன் குழந்தை
வாழ எல்லாம் வேண்டும்
என நினைத்து
தரமான கல்வி
தேடி லட்சங்கள்
கொடுத்து கல்வி விலை பேசும்
அறியாமை.
இயற்கை தந்த செல்வத்தை
விற்று செல்வ செழிப்பாய்
வாழும் கவலையற்ற
மானிடர் மந்தைகள்
உன் வாழ்க்கையும்
நான்கு
சுவருக்குள்
புதைந்து விடும்
-மணி
0 கருத்துக்கள்: