விதிகூத்து
புரிந்திட வருடம்
மறந்தது
இதில் புதிதாய்
புது கூத்து.
ஒரு கிரகணம்
அதில் பல கோடி,
ஒரு நொடி
பொழுதுகள்
சந்திரன் கையில்.
வேடிக்கை கூத்து
இவன்
கொண்ட செல்வங்கள்,
இவனே இன்னார்
அற்று கிடக்கும்
செல்லா காசு
நேரங்கள் இவன் நேரம்
விழுங்கும் நேரம்,
கடிகாரம் தேடும்
புத்திசாலி.
இவன் தேடல்
முடியவும் இல்லை,
இன்று இவனே தேடல்
என்று
ஆன கூத்து
இமைகள் இமைத்தும்
உணரவில்லை,
குறுகி போன எண்ணங்கள்
குறுகி போன பேச்சு
குறுகி போன உறவுகள்
குறுகி போன நம்பிக்கை
குறுகி போன வாழ்க்கை
குறுகிய வட்டம் அதில்
இவன் வரைந்த
குறுகிய வட்டம்.
தனிமை தாழ் கொண்டு
அழைக்க இவன்
அதில் மாய்ந்து போகும்
நேரம் மிக அருகில்.
உடைந்து போன பல
கனவுகள்,
கனா காண இனி
இயலாதோ.
கண்ணீர் தேக்க
மறந்தான்
அழுகுரல் கேளாது
வற்றி போன
குரல்வளை.
பாவ கயிற்றில்
அரு பட
உலகம் மாயையானது ,
மாயை
என தெரிந்து
ஆதாயம் தேட
அறிவு மங்கியது
இருள் பூசிய வானம்
இவன் வண்ணம்
எந்நாளும்
இருள் பூச,
விதி
அரங்குயேற்றிய கூத்து
வேடிக்கை பார்க்கும்
சிறு எறும்பு மனம்
கொண்ட
மானிடர் மந்தைகள்.
இவன் விதி இன்று
இவன் இழப்புகள்
இவனோடு
என்ற
கதை களம் கொண்ட
ஒரு கூத்து
விதிகூத்து என்றுமே
வசூல் அள்ளும்
ஒரு வினோத கூத்து
0 கருத்துக்கள்: