மகிழினி - பாகுபாடுகள்
பள்ளி மணி ஒலித்தது
விரைந்தது கால்கள்
சக்தியை நோக்கி.
அதே நேரம்
ஒரு தனியார் பள்ளியும்
வகுப்புகள் முடிந்து.
இவள் வியந்து பார்க்க
புதிய விசியம் தான்,
அதில்
பயிலும் மாணவிகள்
பார்த்து வியந்து போனாள்.
கேள்விகள் உதிக்க தோன்றியது
சக்தி திகைத்து நின்றால் .
அவள் எண்ணங்களும் கேள்விகளும்,
எதற்கு அவர்களுக்கு சீருடை
வேறு மாதிரி இருகின்றது ?
அவர்கள் காலணிகள்
அணிய வேண்டுமா ?
எதற்கு அவர்கள் அவ்ளோ
பெரிய பை வச்சு இருக்குறாங்க ?
அங்கையும் இந்த மாதிரி
மதியம் சாப்பாடு தருவாங்களா ?
நான் எல்லாம் அங்க படிக்க
முடியாத?
இப்போ நா படிக்குற பள்ளிக்கு
காசு குடுக்குறோமா ?
படிக்குறது எதுக்கு காசு
கொடுக்கணும்?
அப்போ ஏன் அங்க நிறைய
காசு கொடுக்கணும் ?
அப்போ அங்க படிச்சா நிறைய
சொல்லி தருவாங்களா ?
சக்தி மெல்ல எடுத்து சொல்கிறாள்
கல்வி எப்படி வேண்டுமானாலும்
கற்காலம்,எங்கு கற்கிறோம் என்பது
முக்கியம் அல்ல எப்படி
கற்கிறோம் என்பதே முக்கியம்.
பாகுபாடுகள் சிலர்
சுயநலத்தில் உருவானவை.
மௌனம் கொண்டு யோசித்தாள்
சிந்தனை துளிகள்
நீரோட்டமாய் பெருக்க
தொடங்கினாள்.
மகிழினி-இவள் பேசும்
அதிகாரம்.
(இதில் வரும் கதாபாத்திரங்கள்
மகிழினி - பெண் குழந்தை
சக்தி - மகிழினி தாய்
கதை நடக்கும் காலம் 90 )
0 கருத்துக்கள்: