சித்திரை வெயிலின் மோகம்
ஐப்பசி மழை போல
நீ வந்து போகிறாய்
மழை விட்டும் உந்தன் நினைவு
என்னை விட்டு நீங்கவில்லை
இது என்ன புது மழை காலமா
இல்லை கோடை சாரல் மழையா
வரம் கொண்ட பூமி போல நான்
நீ வந்து காதல் விதைத்து போகிறாய்
நிலை தருமா ,விடை தருமா
உந்தன் நினைவில் வாழ்கிறேன்
இது ஏன் என்று உள்ளம் கேட்குதே
காரணம் நீ என்று உள்ளம் உணருதே
உன் பேச்சில் கரைந்து போனேன்
இந்த ஒரு நிமிடம்
இன்பத்தின் உச்சி தொடுகிறேன்
மழை மேகம் கரையாமல்
காற்று வீசி நகரதாமல்
என்னோடு வர நெஞ்சம் கேட்குதே
இந்த கார்காலம் போதும்
என்று நெஞ்சம் சொல்லுதே
-மணி
நல்லது... நன்றி...