• வாழ்கை


    வாழ்கை வாழ 
    தெரியாத மூடர் மத்தியில் 
    மரணம் நாளை என்று 
    தெரிந்தும் வாழ
    திடமான உள்ளம் 
    வேண்டும் 


    நாளை தன்  உலகம் இருளும் 
    என்று தெரிந்தும் 
     இருண்ட உலகத்தில்   வாழ 
    நம்பிக்கை வேண்டும்


    ஒரு நாள் தன்  மகன் 
    தன்னை உதறினாலும் 
    வாழ்கையை நகர்த்த 
    துணிவு   வேண்டும்

    சேனை சென்ற மகன் 
    உயிருடன் வருவான்
    என்று உறுதி 
    வேண்டும் 


    தடைகள் தகர்க்க
     தைரியம் வேண்டும் 
     வெல்ல 
    விவேகம் வேண்டும்

     அன்பை உணர்த்த  காதலி 
     வாழ்கை மெல்ல நகர 
    காதல் வேண்டும்

      தன்  நிலை அறிந்து பிறர் நிலை அறிந்து 
    உதவும் மெல்லிய இதயம் வேண்டும் 

    நட்புடன் சேர்ந்து பயணித்த 
    வாழ்கை  கரை சேரும்
    வாழ்கை - கடவுள் எழுதிய 
    புத்தகத்தின் வரிகள் நாம்....
    -மணி 








     

     
     




0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக