அவளுக்கும் நான் தோழி
உனக்கும் நான் தோழி
உங்கள் இருவருக்கும் இடையில்
தோழியாக இருப்பது தான்
எல்லாவற்றுக்கும் காரணம்.
அவள் உன்னை காதலிப்பதாக
உன்னிடம் சொல்ல
என்னை கேட்டுக்கொண்ட பின்பு
எப்படி இயல்பாக
என் காதலை மறைத்து
உன்னிடம் அவள் காதலை
சொல்வது.
நீ அவள் காதலை நிராகரிக்க
நான் காரணமாக இருக்க
கூடாது என்ற பயம்
நீ அவள் காதலை ஏற்கும் போது
நான் கண்ணீர் சிந்திவிட
கூடாது என்ற பயம்
நீ என் கண்ணீரின் கதை கேட்டு
நான் ஒரு நல்ல நண்பனாக
நீ என் தோழியாக தான்
நினைத்தேன் பழகினேன்
நீ இப்படி எடுத்து கொள்வாய் என
நான் நினைத்து கூட பார்க்கவில்லை என
நிராகரிப்பை வெளிப்படுத்திவிடுவாய்
என்ற பயம் ஏனோ
உன்னை சந்திக்க மனம்
விரும்பவில்லை.
அவள் காதலை
அவனிடம் சொல்லாமல் போனால்
அவள் எப்படி எடுத்து கொள்வாள்
அவளின் ஆருயிர் தோழி
அவளே அவளை வஞ்சிப்பதா
அவளின் நட்புக்கு பாதகம் நேர்ந்து
அவளை இழக்க நேர்ந்தால்
அவள் அவன் நட்பு
முறிந்து போகும் போது
என்னை எப்படி தேற்றி கொள்வேன்
எனக்கு ஆறுதல் சொல்லும்
அவர்கள் இல்லாத நிலையில்
நான் ஒரு கேள்விக்குறி.
உன் மனம் புரிந்து கொள்ளாதது
என் தவறா இல்லை
என் மனம் புரிந்து கொள்ளாதது
உன் தவறா இல்லை
அவள் மனம் புரிந்து கொள்ளாதது
என் தவறா யாரை குறை சொல்வது.
நட்பில் காதல் சாத்தியம் தான்
அவள் உன்னை காதலிக்கிறேன்
என என்னிடம் சொல்லும் போது
என் காதலை தியாகம் செய்வதா
என் காதலை மறைத்து
அவள் காதலுக்கு உதவுவதா.
உங்கள் இருவரின் காதல்
உணர்வுகளுக்கு இடையில்
என் உணர்வுகள் சிதைந்து
கொண்டு இருக்க
அவள் காதல் கடிதம்
உன்னை வந்து சேரும்
உன் பதிலும் அவளிடம் சேரும்.
என் காதலை நான் சுமக்க தயார்
இயேசு சுமந்த சிலுவை விட
சற்று கனம் அதிகம் தான்
ஒரு நாள் இறக்கி வைப்பேன்
சொல்ல முடியாத காதல்
என்ற வருத்தம் அகன்று
என்னை உணர்வுகளின் சிறையில்
இருந்து விடுதலை செய்ய
இந்த கடிதமாக உன்னை
வந்து சேரும்.
நீயும் வாசிப்பாய் என்ற
நம்பிக்கையில் இன்று
உன்னை விலகி செல்கிறேன்
உங்களை விலகி செல்கிறேன்.
- மகிழினி
0 கருத்துக்கள்: