உன்னை நினைவு கூர்கிறது
நீ வீசிய அமில வார்த்தைகள்.
கூட்டம் நிறைந்த கடை தெருவின்
நடுவே என்னை அறியாமல் தவறவிட்ட
நூறு ரூபாய் நோட்டு அந்த தவறை
கூச்சலிட்டு என் மேல்
முதல் முறை அமில வார்த்தைகளை
வீசினாய்.
ஆசை ஆசையாக திரைப்படத்திற்கு
சென்ற போது எதிர்பாரா
போக்குவரத்து நெரிசலில்
சிக்கி தாமதமாக சென்ற போது
நான் தான் காரணம் என்று
அமில வார்த்தைகளை வீசினாய்.
பல வருட கால நண்பர்களை
எதற்சியாக சந்தித்து பேசிய போது
எப்படி பேச வேண்டும்
எப்படி நடக்க வேண்டும் என்று
அமில வார்த்தைகளை வீசினாய்.
உன் அழைப்புகள் எடுக்க முடியாத
சூழ்நிலையில் இருந்த போது
தவறிய அலைபுகளின் காரணம் கேட்டு
அமில வார்த்தைகளை வீசினாய்.
என்னை உன் கைகுள் வைக்க
முற்பட்ட நேரம் எல்லாம்
அமில வார்த்தைகளை வீசினாய்.
நீ முன் போல்
இப்போது இல்லை என
தினம் தினம் ஏதோ
ஒரு காரணம் காட்டி
அமில வார்த்தைகளை வீசினாய்.
உன் ஆணாதிக்க
டாக்ஸிக் உறவில் இருந்து
வெளிவர முடிவு செய்த போது
பிரிந்து செல்லும் நேரத்திலும்
நீ வீசிய அமில வார்த்தைகள்
தேவடியா உன்னை எல்லாம் எவன் டி
கல்யாணம் பண்ணுவான்.
சில காயங்கள்
தோல் மேல் பகுதியை
சிதைக்கும்
மீண்டும் தோல் அணுக்கள்
புதிதாக பிறக்கும்
தோல் நிறம் பெறும்
ஆனால் நீ ஏற்படுத்திய
காயங்கள் தோல் தாண்டி
இரத்த நாளங்கள்,
தோல் அணுக்கள் வரை
சிதைக்கிறது
மீண்டும் என்னை நானாக
பார்க்க இயலாத வகையில்,
அவை அமில வார்த்தை வீசிய
உன்னை நினைவு கூர்கிறது.
- மகிழினி
0 கருத்துக்கள்: