வயது என்பதற்கு எந்த வேலியும் இல்லை
வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான் !
ஆம்
எல்லோரும் மனிதர்கள் தான்,
எல்லோரும் வாழபோவது
ஒரு வாழ்க்கை தான்.
20 வயதிற்கு பிறகு
வாழ்க்கை ஒரு வானவில்
இன்பம்,துன்பம்,கவலை,காதல்,பிரிவு,கோபம்,
திருமணம்,
என எல்லாம் இருக்கும்.
30 வயதிற்கு பிறகு
சிலருக்கு திருமணம் கனவு
சிலருக்கு கனவு திருமணம்
வாழ்க்கை தொலைநோக்குப் பார்வையில்
பார்க்கப்படும்.
40 வயதிற்கு பிறகு
சிலர் வேகமா ஓடுவாங்க
சிலர் மெதுவா நடப்பாங்க
என்னோட உயிரனு சொல்லிக்க
ஒன்றிக்கு மேற்பட்ட உறவு இருக்கும்
50 வயதிற்கு பிறகு
கடன் வாங்காதவனும் உண்டு
கடனோடு வாழ்பவனும் உண்டு
கடமைனு சொல்லிக்க
சிலர்க்கு நிறையவே இருக்கும்
சிலர்க்கு நிறைவுற்று இருக்கும்
60 வயதிற்கு பிறகு
வாழ்க்கை நிறைவு செய்தவர்களும்உண்டு
வாழ்கை நிறைய நினைவுகளை
சுமப்பவர்களும் உண்டு
70 வயதிற்கு பிறகு
வாழ்க்கையில் பொறுப்புகள் அதிகம்
ஏற்று கொண்டவர்களும் உண்டு
வாழ்கையில் பொறுப்புகளை சற்று
தள்ளி வைத்தவர்களும் உண்டு
80 வயதிற்கு பிறகு
இதுக்கு மேல நடக்க முடியாது
சொல்லி ஓய்வு எடுத்தவர்களும் உண்டு
இன்னைக்கு இந்த கீரை விற்றால் தான்
நாளை உணவுன்னு தெருவில் இறங்கி
நடந்தவர்களும் உண்டு
90 வயதிற்கு பிறகு
சிலருக்கு மாத்திரை எழுத்துக்கள்
மறைந்து மங்கி இருக்கும்
சிலர் புது புத்தகம் எழுதி
வெளியிட்டு இருபாங்க.
100 வயதிற்கு பிறகு
இந்த வயதை கடந்தவர்கள் சிலர்
இந்த வயதிலும் உழைப்பவர்கள் சிலர்
இங்க வாழ்க்கை எல்லாருக்கும்
ஒன்று தான்
ஆனா அந்த வாழ்க்கையை
வாழும் முறை தான் வேறு
இப்படி தான் வாழனும் சொல்லுவாங்க
இந்த வயதில் தான்
இதை செய்ய முடியும்னு சொல்லுவாங்க
ஆனால் மன தைரியமும் உடல் ஆரோக்கியமா
இருந்தால் எந்த வயதிலும் எல்லாம் சாத்தியமே
0 கருத்துக்கள்: