புத்தகங்கள் விற்பனைக்கு இல்லை
தினம் ஓடும் எண்ண ஓட்டத்தில்
எண்ணங்கள் எழுத்தாக்கும்
மென்பொருள் கருவி வேண்டும்
அப்படி ஒரு கருவியால்
என் எண்ணங்கள் எழுத்தானால் இந்நேரம்
பல புத்தகம் எழுதியாயிற்று.
சில நாட்கள்
சில புத்தகங்கள் மறுபதிப்பு நடகின்றந்து
சில பக்கங்கள் சேர்க்கப்படுகிறது.
சில நாட்கள்
சில புத்தகங்களின் பக்கங்கள்
சினத்தால் கிழித்து எறியப்படுகிறது
சில புத்தகம் கால போக்கில்
சிதைந்து போகிறது
சில புத்தகம் மறைக்கப்படுகிறது.
தினம் ஒரு புத்தகம்
காதல் நாட்கள்
கவிதை புத்தகங்கள்
அரசியல் கூற்றுகள்
சமூக நீதி புத்தகங்கள்
ஆன்மாவின் கருத்துகள்
உளவியல் புத்தகங்கள்
நொடிக்கு நொடி
நடக்கும் யாவும்
கருத்துக்களின்/எண்ணகளின் கோர்வையில்
ஒரு புத்தகம்.
புத்தகங்கள் மட்டும் சேர்த்து
வைக்க என் மூளையில்
எப்படி தான் இடம் இருக்கிறதோ ?
ஒரு அறை போதாது
நூலகம் தேவைபடுகிறது.
என் புத்தகத்தின்
முதல் காதலன் நான்
என்னை விட என் எழுத்துக்களை
யாராலும் அதிகம் நேசித்து
விட முடியாது
மனக்குரல் பேச்சுகள்
புத்தகங்களாக அச்சிட்டால்
ஒரு காடு மரங்கள் தேவை,
இங்கே காடுகளை
காப்பாற்றும் நோக்கில்
என் மனம்
என் எண்ணங்களுக்கு
எழுத்து வடிவம் கொடுக்க மறுக்கிறது.
எண்ணங்கள் எழுதப்படாத
புத்தகமாகிறது,
ஆதலால்
புத்தகங்கள் விற்பனைக்கு இல்லை.
0 கருத்துக்கள்: