கோபத்தின் பரிமாணம்
கோபத்தில் வார்த்தைகள் வர்ணஜாலம்
கோபத்தில் பேசும் வார்த்தைகள்
கத்தி முனைவிட கூரானது
கோபத்தில் பேசிய வார்த்தைகள்
தண்ணீரில் கலக்கும் கழிவு நீர்.
உறவுகளை சிதைக்கும்
உணர்வுகளை நசுக்கும்
உணர்வுகளை வெளிக்கொண்டுவரும்
உணர்ச்சியை பேருக்கும்
உயிரையும் கொல்லும் தன்மை,
வாழ்க்கையை முடம் ஆக்கும்
வாழ்க்கையின் திருப்புமுனை
வாழ்க்கையை வெறுக்க செய்யும்
வாழ்க்கையின் புரிதலுக்கு உதவும்
கேள்விகளை தூண்டும்
கேளிக்கைகளை ஏற்க மறுக்கும்
கேட்பார் யாவரும் ஊமைகள்
கோட்பாடுகள் தகர்க்கும்
பொறுமை இழக்கும்.
கோபத்தை காதல் வென்று
அன்பு கொடி நாட்டும்.
காதிலில் கோபங்கள் அழகு
கோபத்தில் காதல் தனிப்பெரும் அழகு.
கோபத்தில் அன்பின்
ஒற்றை முத்தம் முற்றுப்புள்ளி
ஒற்றை பரிசு முற்றுப்புள்ளி
ஒற்றை கண்ணீர் முற்றுப்புள்ளி
யாருமற்ற தனிமை முற்றுப்புள்ளி
யாருமறியாத பயணம் முற்றுப்புள்ளி
யாவும் அறிந்திட சிந்தனை முற்றுப்புள்ளி.
முற்றுப்புள்ளிகள் ஏறாளம்
ஏற்க மறுப்பதே நிதர்சனம்
கோபம் கொடியதும் இல்லை
நன்மையையும் இல்லை
இடம் பொருள் ஏவல்
கோபத்தின் பரிமாணம்
0 கருத்துக்கள்: