• புத்தகமா டிஜிட்டலா எதை இழக்கிறோம் ?

                          


    தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு வாசிப்பு என்பது டிஜிட்டல் உலகில் காணொளி மற்றும் மின்னூல் தான். ஏனோ 9௦’ல் பிறந்த சிலர் மட்டும் நடுவில் நின்று குழப்பி கொண்டு இருக்கிறார்கள். ஆம் டிஜிட்டல் உலகில் ஒன்றியவர்கள்  சிலர் மட்டுமே. 



    21 நூற்றாண்டில் பிறந்த எல்லாரும் அதிகம் புத்தகம் படிக்க விரும்புவது இல்லை அவர்கள் விரும்புவது அனைத்துமே டிஜிட்டல். நீங்கள் அவர்களிடம் 5 பக்க கட்டுரை கொடுத்து படிக்க சொன்னால் அவர்கள் இதை நீங்களே படித்து கொள்ளுங்கள் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அந்த கட்டுரையை 2 நிமிட காணொளியாக புகைப்படங்களோடு சொன்னால் அவர்கள் உடனே பார்த்து விடுவார்கள். இதனை அவர்கள் நேரம் மேலாண்மை என்று கூட சொல்லுவார்கள். அவர்களை அதிகம் ஈர்ப்பது  சமூக வலைத்தளங்கள் தான். 

    9௦’ல் பிறந்தவர்களுக்கு இரண்டும் பரிட்சையம் தான். அதில் நானும் ஒருவன் . நான் புத்தகத்தை படித்து இருக்கிறேன் அதே நேரம் சமூக வலைதளங்களிலும் அனுபவம் உண்டு. ஆர்குட்(orkut) முதல் இன்றைய செயலி(apps) வரை நுணுக்கமான அனுபவம் உண்டு. 

    எனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு, அதில் அதிக ஆர்வம். ஒரு புத்தகம் என்று எடுத்து கொண்டாள் அதனை இறுதி பக்கம் வரை படிப்பேன். ஒரு புத்தகம் படித்து முடித்து பல வருடங்கள் ஆனாலும்கூட அந்த புத்தகத்தின் மைய கருத்தோ கதையோ நினைவில் இருக்கும். அந்த வாசிப்பினால் கற்பனை திறமை அதிதம். ஒரு கதை புத்தகம் என்னை கதையோடு பயணிக்கும் உணர்வு உண்டாக்கும். இது புத்தகம் வாசிக்கும் அனைவருக்கும் பொருந்தும். 

    என்னை போன்ற சிலருக்கு எப்போது டிஜிட்டல் தாக்கம் வந்ததோ அப்போது ஒரு பயமும் வந்தது. என்  சிந்தனை, கதை, கவிதை என எல்லாவற்றையும் வலைபதிவு ஒன்று ஆரமித்து பதிவு செய்தேன்.  முதலில் என்  டைரி அல்லது ஏதோவொரு புத்தகம் இதற்கு என வைத்து அதில் எழுதினேன் அடுத்த கட்டமாக முதலில் கையால் புத்தகத்தில் எழுதி பின் அதை தட்டச்சு மூலம் வலைப்பதிவில் பதிவு செய்ததேன். இப்போது அதித தொழில்நுட்பம் மூலம் நேரடியாக பதிவு தட்டச்சு மூலம் செய்கிறேன். என்னோட வாசிப்பது டிஜிட்டலாக மாறி விட்டது. திடீர் என்று புத்தகம் வாசிக்கும் ஆசையும் வந்து விடுகிறது ஆனால் என்னால் தொடர்சியாக 1௦ பக்கங்கள் படிக்க முடியவில்லை. அதே நேரம் என்னால் டிஜிட்டல் உலகளில் பயணிக்க முடியவில்லை ஒரு பயம் எங்கு அதற்க்கு அடிமையாகி விட்டோமோ என்று. இந்த இரண்டிற்கும் நடுவில் குழம்பி  கொண்டு இருக்கிறேன். 

    ஆம் எங்கு டிஜிட்டல் உலகம் விழுங்கி விடுமோ என்று தான். சரி புத்தகம் படிக்கலாம் என்றாலும் முடியவில்லை டிஜிட்டல் மோகத்தில் அதனோடு பயணிக்க மனம் விரும்புகிறது ஆனால் மூளையோ பத்தகத்தின் பக்கம் செல்கிறது. என் செய்வது வாசிக்கும் ஆர்வத்தை கூட பயம் பிணை கைதியாக பிடித்து வைத்து இருக்கிறது.  இதனை சிலர் சிறப்பாக கையாண்டு இருகிறர்கள். அவர்கள் தேடி தேடி படிப்பதும் மின்னூல். எழுதுவதும் வாசிப்பதும் சமூக வலைத்தளங்களில் தான். என்னதான் சமூக வலை தளங்களில் எழுதினாலும் சிலர்க்கு ஆசை ஒரு புத்தகமாவது அச்சிட வேண்டும் என்பது தான்.


    ஆனால் இந்த டிஜிட்டல் உலகம் எல்லா தலைமுறையையும் தன் வசம் இழுத்து கொண்டு தான் இருக்கிறது. கட்டுரைகள் முதல் கவிதை வரை எல்லாம் இணையம் மூலமாக தான். பிடித்தவற்றை ஒரு ஷேர் ஒரு லைக் ஒரு போர்வேர்டு என அதை பற்றி பேசுவது  குறைகிறது. முன்பு எல்லாம் புத்தகம் வாசிப்பதுக்கு என்று பள்ளியில் 1 மணி நேரம் ஒதுக்கப்படும். அதன் நோக்கம் அப்போ எனக்கு புரியவில்லை, ஏன் அப்படி செய்கிறார்கள் என்று அவர்கள் சொன்னதும் இல்லை. அந்த 1 மணி நேர வகுப்பு ஒன்று நாம் தானாக ஒரு புத்தகம் படிக்க வேண்டும் இல்லை ஒரு புத்தகத்தை ஒரு மாணவர் வாசிப்பார் அதை கேட்க வேண்டும். அந்த முறை ஏன் என்பது இப்போது புரிகிறது. நான் ஒரு புத்தகம் படித்து முடித்தவுடன் அதை யாரிடமாவது பகிர வேண்டும் என்று தோணுகின்றது அந்த புத்தகத்தின் கருத்தை விவாதிக்க வேண்டும் அதனை பற்றிய உரையாடல் நிகழ்த்த வேண்டும். ஆனால் இன்று அப்படி இல்லை யாரும் பேச முன் வருவதும் இல்லை.   

    புத்தக வாசிப்பும் பின்பு அதனை பற்றிய உரையாடல் எல்லாம் ஒரு சிறந்த தகவல் மாற்றும் முறை. அந்த உரையாடல் புத்தகம் வாசிக்க நம்மை நகர்த்தி செல்லும். இதை தான் இந்த இடைப்பட நிலையில் இழக்கிறோம் என்று உணர்கிறேன். இந்த டிஜிட்டல் யுகம் எதுவாக இருந்தாலும் 5 நிமிடத்தில் முடித்து விட சொல்கிறது. என்னை போன்று எண்ணற்றோர் எழுதி கொண்டு தான் இருகிறார்கள் ஆனால் இதனை வாசித்து இதன் குறை நிறை பற்றி விவாதிக்கதான் எழுதும் எனக்கும் நேரம் இல்லை வாசிக்கும் உங்களுக்கும் நேரம் இல்லை. புத்தகமா டிஜிட்டலா எதை இழக்கிறோம் ?                       



0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக