• பரியேறும் பெருமாள்



    பரியேறும் பெருமாள் 


    பரியேறும் பெருமாள் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல தமிழ் படம். கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில், எண்ணிகையில் குறைந்த திரையரங்கில் ஓடி கொண்டு இருக்கும் ஒரு தரமான படம். கருப்பி பாடல் முதல் படத்தின் முன்னோட்டம் வரை ஏற்படுத்தி எதிர்பார்ப்புகள் ஏராளம் ஆனால் படம் எந்த வித ஏமாற்றத்தையும் தரவில்லை. அப்படி ஒரு நேர்த்தியான படம். திருநெல்வேலி தமிழ் அழகு அதை படம் முழுக்க கையாண்டு இருக்கும் விதம் சிறப்பு.
    பரியேறும் பெருமாள் அப்படினா என்னலே . குதிரை மேல எரி வரும் பெருமாள், சாமி பெயரு அண்ணே. சரிலே...முன்னோட்டத்தில் வந்த வசனம் யோகி பாபுவின் நடிப்பு இங்க காமெடி தாண்டி தனியே ஒரு குணச்சித்திர நடிகர் போல தான் படம் முழுக்க வருகிறார். இன்னும் சாதி ரீதியான தாக்குதல் இந்தியாவின் பல பகுதியில் நடந்தாலும் அவை என்னவோ வெறும் செய்தியாகவே போய் விடுகிறது. அப்படி ஒரு சுயநல  வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
    இது திருநெல்வேலி மாவட்டத்தில் புளியங்குளம் என்ற கிராமத்தில்  இருக்கும் பரியேறும் பெருமாள் BA.BL என்ற இளைஞனின் கதை. தான் வளர்க்கும் நாய் கருப்பி மீது அவன் கொண்ட பாசம் அதனை இழந்த பின்பும் அந்த கருப்பின் நினைவுகள் என அது ஒரு தனி தன்மை கொண்ட ஒரு பகுதி. அவன் சேரும் அரசு சட்ட கல்லூரி அதில் அவனுக்கு கிடைக்கும் நண்பர்கள் குறிப்பாக சாதி வேறுபாடு பார்க்காத நண்பர்கள், பின்பு சாதிய ரீதியாக அவன் சந்திக்கும் பிரச்சனை,  பின் வரும் காதல் என ஒவ்வொரு காட்சிகள் சிறப்பாக இருக்கும். கதிர் பரியேறும் பெருமாளாக வாழ்ந்து இருக்கிறார் அப்படி ஒரு நடிப்பு.
    அடுத்து ஜோ என்கிற ஜோதி மகாலெட்சுமி ஆனந்தி என்ற ஒரு நடிகை கயல் படத்தில் பார்த்ததை விட சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்பா மீது அளவு கடந்த பாசம், காதலுக்கு நட்புக்கும் பகுத்து அறிந்து நடை முறையில் சாத்தியம் எதுவோ அதுபோல் நடக்கும் பக்குவம் கொண்டவள். பேச்சில் இனிமை குணத்தில் தங்கம் என சொல்லும் அளவிற்கு ஒரு காதாபாத்திரம்.  
    படத்தின் பாடல்கள் எல்லாம் தேவையான இடத்தில் மிக கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறது. அதிலும் “நான் யார்”  பாடல் மிகவும் அற்புத்தமாக காட்சி ஆக்கப்பட்டுள்ளது. சந்தோஷ இசை மெய் சிலிர்க்க வைக்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் முதல் படைப்பு ஒரு முத்தான படைப்பு. படத்துடன் பார்வையாளர்களையும் சேர்த்து பயணிக்க வைத்து இருக்கிறார். பா. ரஞ்சித் தயாரிப்பு.    
    வசனங்கள் அனைத்தும் பாராட்டுதலுக்குரியது.
    ஒரு காட்சியில் ஜோ அப்பா சொல்லுவார் “இங்க எதுவேனாலும் எப்போவேனாலும் மாறலாம் அப்போ பாக்கலாம்  ”அதற்கு பரியன் “நீங்க நீங்களா இருக்குற வரைக்கும்   நா நாய்யா தான் இருக்கனும் நீங்க நினைக்குற வரைக்கும் எதுவும் மாறது எல்லாம் அப்படி தான் இருக்கும்”

    ஒரு காட்சியில் ஆனந்த்(யோகி பாபு) “நா எப்போலே சாதி பாத்து பழகி இருக்குறேன்“ என சொல்லும் போது யதார்த்தம் வெளிப்படுகிறது .
    ஜோ அப்பா ‘என் பொண்ணு மேல உனக்கு காதல் இல்லையா ? ’  பரியன் “அத என்னன்னு புரிஞ்சிக்கிறதுகுள்ள நாய் அடிக்குற மாதிரி அடிச்சு அசிங்க படுதிடிங்களே...

    உங்க பொண்ண பாருங்க அவ நினைச்சத எப்போ வென பேசலாம் ஆனா நான்...  “.
    கல்லூரியில் சேரும் போது
    கல்லூரி முதல்வர் “நீ படிச்சு என்ன ஆகா போற ”
    பரியன் “நா டாக்டர் ஆகா போறேன் ”     
    கல்லூரி முதல்வர் “இங்க படிச்சு வக்கீல் தான் ஆகலாம் டாக்டர் எல்லாம் ஆகா முடியாது”
    பரியன் “ஐயோ சார் நா டாக்டர் அம்பேத்கர் மாதிரி வருவேன் சொன்னேன் சார் ”.

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
    பரியன்- ஜோ இடையான அந்த உறவு, அதனை காட்டும் விதம் அழகியல். நட்பிற்கும் காதலுக்கும்  இடையில் நடக்கும் ஒரு அழகிய போர், அந்த உறவை புரிந்து கொள்ள தேவை படும் இடப்பட்ட நாட்கள். நான் நேசிக்கும் ஒரு அழகிய காதல் பரியன்- ஜோ காதல்.    
    சாதியின் பெயரால் பரியன் இழந்த கருப்பி, இருக்கி பிடிக்க முடியாத காதல், தந்தை பாசம் என பரியனுக்கு நேரும் நிகழ்வுகள் எல்லாம் எதார்த்தமும் உண்மை. இப்போ எல்லாம் சாதி யாரு சார் பாக்குறாங்க சொல்லுறவங்களுக்கு  20௦5 யில் நடத்த கதை என நினைத்தால் தவறு இதை போல் இன்னும் பலர் சாதியின் பெயரால் ஒடுக்கபடுகிரர்கள் இந்த காலத்திலும்.
    சாதியை விட்டு வெளிய வர நினைத்காலும் அந்த சாதியினர் ஏறபடுத்தும் விளைவுகள் இந்த திரை படத்தில் வெளிப்படையாக பேசப்பட்டது உதாரணமாக
    “என்னோட பொண்ண விட்டு போ பா இவங்க சாதி சாதினு  சொல்லி என்னோட பொண்ண கொண்டுவாங்க பா இனி பழகாத பேசாத”
    “நம்ம சாதிக்காக இத கூட பண்ண மாட்டேனா. இத நம்ம குல தெய்வத்திற்கு பண்ணுறத நினைச்சுக்குறேன் யா போங்க ”
    இப்படி பட்ட வசனங்கள் உண்மையை பேசுகிறது. சாதி ஆணவ கொலைகள் பற்றியும் அதை எப்படி நிகழ்கிறது என்பதையும் காட்டுகிறது.   

    பரியன் எல்லா தடைகளையும் மீறி எப்படி வாழ்கையில் போராடுகிறான் என்பது தான் இங்கு முக்கியம். இந்த சமூகத்தில் இன்னும் பல பரியன் இருக்கிறான். விடியலுக்காக எங்கும் பலரின் வாழ்க்கை இந்த பரியேறும் பெருமாள். படம் பார்த்து வெளியே வரும் போது அவளோ கணமா இருக்கும் இதயம்.
    இங்கு யாரும் அடுத்தவர் நிலையில் இருந்து இன்னும் யோசிக்கும் மனப்பான்மை வரவில்லை. தான் என்கிற நிலை மறந்து அடுத்தவர் நிலை புரிந்து கொண்டாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.  
    உறியடி படத்திற்கு பின்பு சாதி ஒடுக்குமுறை துளியாம பதிவு செய்த படம். பரியேறும் பெருமாள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.         


2 கருத்துக்கள்:

  1. Yazhini Vijayakumar சொன்னது…

    சிறப்பான பதிவு... பேரன்பை விட இந்த படத்தின் விமர்சனத்தில் உங்கள் தெளிவின் ஆழம் அதிகம் 👏👏👏👏

  2. Manikandan Akila Annamalai சொன்னது…

    நன்றி

கருத்துரையிடுக