யாரும் அமராத விசுப்பலகை
பசுமை என்ற வார்த்தை
அரசு பதாகைகளில் படித்து படித்து
சலித்து போய்,
அந்த பசுமையயை
தேடி தேடி கண்டுபிடித்து
சுற்றி சுற்றி பார்த்து வியந்து
தலை சுற்றி அமர்ந்த
அந்த விசுப்பலகை.
நீண்ட நாள் சேர்த்து வைத்த சோகம்
நீண்ட நாள் சேர்த்து வைத்த கோவம்
நீண்ட நாள் சேர்த்து வைத்த கண்ணீர்
நீண்ட நாள் சேர்த்து வைத்த கனவு
நீண்ட நாள் ஏங்கிய தனிமை
நீண்ட நாள் தேடிய மன அமைதி என
நீண்டுகொண்டே போயின.
தொலைத்து தொலைத்து தேடிய சந்தோசம்
மரத்தில் தேங்கிய மழை துளிகள்
காற்றின் இசையில்
சொட்டு சொட்டாய் என்மேல் விழ
மீண்டும் புத்துணர்ச்சி
கண்கள் மூடி
இயற்கையின் சத்தங்கள்
உணரும்போது கிடைத்த சந்தோசம்.
அந்த குளுமை
கோவத்தின் உச்சியில் இருந்த
நிலையை மாற்றியது
அன்று புரிந்தது
ஏன் புத்தர் மரத்தின்கீழ்
ஞானம் பெற்றார்.
நதியில் நீந்தும் மீன்கள்
தன் சோகங்களை எங்கு
கொட்டி தீர்கின்றது
ஒருவேளை சோகங்கள் இல்லையா
என யோசித்து கொண்டே
என் சோகங்கள்
நீரோடு அடித்து செல்லப்பட்டது.
அந்த அமைதியில்
அலைபாய்ந்த எண்ணங்கள் என்னை
அறியாமலே கண்களில் கண்ணீர்
அன்று அழுது தீர்த்து கொண்டேன் மீண்டும் இந்த
அரிய வைப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்று.
சுற்றம் சூழ உறவுகள் இருந்தாலும்
சற்று தனிமையில் இருப்பது ஒரு ஆனந்தம்
சிந்தித்து கொண்டே ஒரு
சிறு நடை தூரம்
சற்று பின் நோக்கி பார்த்து கொண்டே நடந்தேன்
சிறு விசிப்பலகை யாராவது அமர்ந்திட கூடுமோ என்ற
சின்ன பயத்தில்.
செய்வது அரியாது சுற்றி
மீண்டும் அந்த விசுப்பலகையில்
யாரும் அமராத விசுப்பலகையில்
அந்த விசுப்பலகை தவிர்த்த பாக்கியம்
அற்றவர்களுக்கு தெரியாது
அதன் அருமை
அத்தனை உணர்வுகளையும் சுமந்தது
அந்த யாரும் அமராத விசுப்பலகை.
0 கருத்துக்கள்: