எப்படி தூக்கம் வருகிறது ?
எப்படி நாவில் கூச்சமின்றி
பேச விழைகிறார்கள்
"மக்களை பாதுகாக்க தான் சுட்டோம் " என்று,
மக்களை பாதுகாக்க மக்களை
நோக்கி சுடுவதா ?
அங்கே இரத்த வெள்ளத்தில்
எம் மக்கள்,
இங்கோ எதற்கும் இரக்கமின்றி
சூதாட்டத்தை பெருமிதம்
கொள்வதுமே
எம் மக்கள் தான்.
அதிகார வர்கத்தை
ஆதரிக்கும் ஒரு சமூகம்
ஏன் இந்த வன்மம்?
உறவுகள் இழந்த வேளையில்
உணர்வுகள் கொல்ல படுவதும்
இங்கே தான்.
தன் நாட்டில் உறவுகள் இறந்தும்
கவலை இன்றி
எப்படி தூக்கம் வருகிறது ?
இரத்தம் படிந்த கைகளை
கழுவிக்கொண்டு உணவு அருந்தி,
தலையில் வைத்து
எப்படி தூக்க முடிகிறது ?
ஒரு குடும்பத்தின் ஓலக்குரல்
சத்தம் செவி கிழிக்கும்
வேளையிலும்
எப்படி தூக்கம் வருகிறது ?
நிவராணம் வேண்டி யாரும்
போராடவும் இல்லை
நிரந்தர தீர்வுக்காகவே
போராடினார்கள்
நிரந்தரம தீர்வு ஏதும் இல்லை
நீ உன் உயிர்
நீத்துக்கொள் என்றான் அரக்கன்
தன் மண்ணின் உரிமைக்கு
தடை விதிக்கும் அரசு
தன் மண்ணின் மைந்தர்கள்
துச்சமாக நினைத்து சுடுவதும் அரசு
இதற்கு இடையில் மக்கள் ஆட்சி
எங்கு வந்தது ?
எப்படி தூக்கம் வருகிறது ?
0 கருத்துக்கள்: