நாளை
நாளை பற்றி கவலை கொள்ளாதே
நாளை நடப்பது
நாளை பார்த்து கொள்வோம்
என்றார்கள்.
இன்று என்ன நடக்கிறது
என்றே யாருக்கும் புரியவில்லை
நாளை பற்றி யோசிக்க நேரமும் இல்லை
நடந்த பின் வினாவி பயனும் இல்லை.
இன்றைய இரவு
தொலைகாட்சி பார்க்கும் வேளையில்
எவனோ ஒருவன் அங்கு மணல்
திருடி கொண்டு இருக்கிறான்,
நாளை ஆறுகள் தண்ணீரின்றி
வெறும் ஓடையாய் இருக்கும்.
இன்றைய பொழுது உல்லாசமாய்
கழித்து கொண்டு இருக்கும் வேளையில்
எவனோ ஒருவன் அங்கு பாசனத்திற்கு
திறந்த நீரை திருடி
குளிர் பானம் தயாரித்து
கொண்டு இருக்கிறான்,
நாளை அவன் தலைமுறை
இங்கு வசிக்காது,
உன் தலைமுறையோ
பிச்சை எடுத்து கொண்டு இருக்கும்.
இன்று நீ உறங்காமல் கண் விழித்து
கணினியில் வேளையில்
அங்கு ஒரு கும்பல் உறங்காமல்
காடுகளை சிதைத்து
சாலைகள் கல்லுரிகள் சிலைகள்
என வனத்தை வன்மத்துடன்
அழித்து கொண்டு இருகிறார்கள்,
நாளை பல்லுயிரும் இல்லை
வண்ண பறவையும் இல்லை
புகைப்படங்களை காட்டி கதை
சொல்லிகொண்டு இருப்பீர்கள்.
இன்று நீ பயன்படுத்தும்
நவீனம் பிளாஸ்டிக்
குப்பைகள் அங்கு சதுப்புநிலக்
பகுதிகளில் கொட்டி
பறவைகளை நவீனமாய்
விரட்டி கொண்டு இருகிறார்கள்,
நாளை மனிதன் பிணமும்
வீசப்பட்டால் ஆச்சரியம் இல்லை
நீயும் மக்கும் நிலையில் இருப்பாய்
ஆனால் உன்னை உண்ண
கழுகுகள் இருக்காது
கிருமிகள் தான் மிஞ்சும்.
நகரத்தின் ஆசை துரத்தி துரத்தி
கிராமம் விட்டு நகரம் துறந்து
மாசு காற்றில் மூச்சு திணறி
நஞ்சு எது நல்லது எது என
ஆராய்ந்து உண்டு
பிணி தொற்றி
நரகத்தில் வாழ்கிறோமோ என தோணும்,
நாளை நகரத்தை நுகர்வது தவிர வேறு
வழிகள் இல்லை என்று ஆனா பின்
கிராமம் தேடி என்ன பயன் ?
இன்று வியந்து பார்த்த மலைகள்,
ஆறுகள்,குளம், பறவைகள்,
அருவிகள் எல்லாம்
நாளை கவிதையின்
உவமையிலும் கற்பனையிலும்
மட்டுமே காணும்
நாள் வெகு தொலைவில்
இல்லை.
சுயநலம் தவிர்த்து பொதுநலத்துடன் சிந்திப்போம்
0 கருத்துக்கள்: