• மழுங்கிய சிந்தனை -ட்ரெண்டிங்


    மழுங்கிய சிந்தனை -ட்ரெண்டிங்



    ட்ரெண்டிங் வீடியோ காண தவறாதிரங்கள். அந்த நடிகையின் ட்ரெண்டிங் போடோஸ். அந்த நடிகையின்  ட்ரெண்டிங் ஆபாச வீடியோ என இப்போது எதற்கு எடுத்தாலும் ட்ரெண்டிங் ட்ரெண்டிங் என சொல்லி ஒரு வித மாயையை உருவாக்கி இருக்கிறது இந்த சமூகம்.

    ட்ரெண்டிங் என்பது ஒரு காணொளி பதிவு, புகைப்பட பதிவு மற்றும் யாரோ சொன்ன கருத்துக்கள் சமூக வலைதளங்களில்(whatsapp, facebook,twitter) அதிகம் பார்க்கப் பட்ட பேசப்பட்ட ஒரு செய்தி தான். அப்படி இந்த மக்கள் எதை தேடி பார்த்து ட்ரெண்டிங் செய்கின்றார்கள் என்று பார்த்தால் கொஞ்சம் முகம் சுளிக்கவைக்க தான் செய்யும். youtube என்ற காணொளிப்பதிவு வலைதளத்தில் ட்ரெண்டிங் என்ற ஒரு தனி பிரிவு இருக்கும் அதில் நீங்கள் எந்த நாடோ அந்த நாட்டில் ட்ரெண்டிங் உள்ள காணொளிப்பதிவு வரிசை படுத்துவார்கள், முதல் 5௦ ட்ரெண்டிங் காணொளி பார்த்தால் சற்று ஆச்சிரியமாக தான் வரும்.

    அப்படி என்ன என்று பார்த்தால் அதில் தினமும் ட்ரெண்டிங் பட்டியிலில் வரும் காணொளிகள்.
    ·        
    ·       இந்த நடிகை/நடிகர் இப்போ எப்படி இருக்கிறார் ?
    ·
             இந்த நடிகை/நடிகர் யின்  குழந்தையா இவர் ?
    ·         இவருக்கு இப்படி ? அப்படியா ? இவரா இப்படி ?
    ·         வன்மம் கொண்ட தொலைகாட்சி நெடுந்த்தொடர்கள் இரண்டோ அதற்கு மேல்.
    ·         திரைப்படம் முன்னோட்டம்,பாடல், திரை விமர்சனம்.
    ·         இவர் இந்த சாதியா ? இவர் மதம் மாறிட்டாரா ?
    ·         தேவை இல்லாத குப்பை காணொளிகள்.

     
    அதிகம் மேல் குறிப்பிட்ட வகையான காணொளி தான் ட்ரெண்டிங். மக்கள் எதை பார்க்கிறார்கள் என்பே இந்த ட்ரெண்டிங் என்றால். மக்களின் சிந்தனையும் இதில் தான் இருக்கிறதா. அது எப்படி ஒரு தனிநபர் பற்றி தவறான தகவல் அல்லது அவர்களின் தனிப்பட்ட செய்திகளில் அவ்வளவு நாட்டம். இதிலும் ஒரு சில காணொளிகள் பெண்னை இழிவு படுத்தும் விதமாகவும் காமதோட ஒன்றியதகவே இருக்கும். இந்த வகையான ட்ரெண்டிங் ஒரு பக்கம்.


    டூவிட்டேர்(twitter) இதில் ட்ரெண்டிங் பட்டியலில் வருவதும் இந்த சினிமா குறித்த செய்திகள். இரு ரசிகர் பட்டாளங்களின் சண்டை அதற்கு ஒரு ஹஷ்டக் (hashtag) என்று இருக்கும். இங்கு ஒரு அரசியல் தலைவரின் கருத்து கூட ட்ரெண்டு ஆகும்.




    முகபுத்தகம் (facebook) இதிலும் ட்ரெண்டிங்க்கு பஞ்சம் இல்லை. இதில் ஒரு படி மேல எல்லாம் கலந்து இருக்கும். உண்மை எது பொய் எது என்று கண்டு புடிப்பது ஒரு பெரிய கஷ்டம். தனி நபர், ஒரு சமூகம் , கட்சி இவர்களின் ஆதாயம் தேட தனக்கு தோன்றும் கருத்து, புகைப்படம் என்று ட்ரெண்டிங் செய்வது இங்கு அதிகம். உதாரணம் ஒரு மாவட்டத்தில் அங்கு வசிக்கும் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அவருக்கு சேர வேண்டிய மாற்றுத்திறனாளி வண்டி கிடைக்கவில்லை அதை இங்கு பதிவு செய்கிறார்கள். பதிவு செய்த அன்று பலர் அந்த மீம்ஸ் ஷேர் செய்து அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்கள். இரண்டு நாட்கள் பிறகு அந்த பெண்ணுக்கு  மாற்றுத்திறனாளி வண்டி மாவட்ட ஆட்சியாளர் வழங்கினார் என்ற செய்தி. இதை பாராட்டி ஒரு மீம்ஸ் இதற்கு எதற்கு பாராட்டு “ஒருவர் தன் வேலையை செய்யாமல் இருப்பதை சொன்ன பரவாயில்லை ஒருவர் அவர் கடமையைச் தாமதமாக செய்ததை பாராட்டி ஒரு செய்தி”.சிந்திக்காமல் செய்யும் வேளையில் இதுவும் ஒன்று.                      

    இந்த facebook பதிவுகள் சிலரை இன்னும் முட்டாளாக தான் ஆக்குகிறது. அதுவும் இந்த ட்ரெண்டிங் என்ற வார்த்தை இன்னும் அடிமுட்டாள் ஆக்குகிறது. எப்படி என்று கேட்டால்
    ·         ஒரு முறை ஷேர் செய்தால் அவருக்கு ஒரு ருபாய் கிடைக்கும்.
    ·         ஷேர் செய்தால் நன்மை வரும்.
    ·         ஷேர் செய்தால் இவருக்கு இந்த பதவி தரப்படும் (எப்படி என்று யாரும் யோசிப்பதில்லை. அந்த பதவி என்ன என்று தெரியாது).
    ·         படங்களின் போஸ்டர்,நடிகை நடிகனின் புகைப்படம் (கேட்டால் என் உரிமை என்று சொல்லுவார்கள் ஆனால் நல்ல படம் வந்தால் அதை ஆதரிப்பதுகூட இல்லை வெறும் குப்பை படங்களுக்கு மட்டும் இந்த ட்ரெண்டிங்).
    ·         தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் (இப்படி இருந்தால் எதை வேண்டுமென்றாலும் ஷேர் செய்வார்கள்).
    ·         ட்ரெண்டிங்யின் மறுபெயர் வைரல் இங்கு.
    ·         திரைபடத்தில் நடிகர் பேசும் வீர வசனம், கருத்துக்கள். (நிஜத்தில் வேறு முகம்).
    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் என்ன செய்வது. மக்களை யோசிக்க விடாமல் செய்வதில் இந்த ட்ரெண்டிங் முக்கிய பங்கு இருக்கிறது. உதாரணம் ௨௦17யில் வெள்ள பாதிப்பு வந்த போது மக்கள் அரசாங்கம் மீது கோபம் கொண்டனர் அப்போது பீப் song என்ற பாடல் ட்ரெண்டிங் ஆனது மக்கள் அரசு மீது இருந்த கோபத்தை மறந்தனர். இப்படி நிறைய நிகழ்வுகள் சொல்லி கொண்டே போகலாம். இந்த ட்ரெண்டிங் செய்திகள் மக்களின் சிந்தனை சிதைக்கிறது, ஆமாம் மக்களே இதை ட்ரெண்டிங் செய்கிறார்கள் பின்னர் அதையே குறையும் சொல்கிறார்கள் (அந்த விசயம்தான் இந்த பிரச்சனையில் இருந்து திசை திருப்புகிறது).  

    ஏன் ட்ரெண்டிங் ஆகுகிறது ?
    மக்களின் சிந்தனையயை மட்டம் தட்டி யோசிக்க விடாமல் சிலர் அவர்கள் சுயநலத்தால் வைத்து இருக்கின்றனர். மக்கள் எண்ணம் எதுவோ அதுவே ட்ரெண்டிங். ஒரு 2௦ வயது மதிக்க தக்க இளைஞகனின் எண்ணம் திரைப்படம், பாடல் , காமம் காணொளிகள் (pornography) என்று பெரும்பாலும் இருக்கும் அதுவே இந்த ட்ரெண்டிங். அவர்களை சரியான பாதையில் சுயமாக யோசிக்க விட மாட்டார்கள். ஒரு பொது பிரச்சனை அவர்களிடம் சொல்ல வேண்டும் என்றாலும் அதை அவர்களுக்கு பிடித்த நடிகர் மூலமாகவோ அல்லது திரைப்படம் வாயிலாக தான் சொல்ல வேண்டி இருக்கு அதை அவர்கள் முழுதாக புரிந்து கொள்வதில்லை. இப்படி இவர்கள் தேடி தேடி பார்க்கும் காணொளி செய்தி தான் ட்ரெண்டிங். இதில் அணைத்து வயதினரும் அடங்கும். நெடுந்தொடர்கள் பணிக்கு செல்லும் பெண்கள்/ஆண்கள் மற்றும் இணையம் தான் தொலைக்காட்சியாக கொண்டு இருக்கும் மக்களால் ட்ரெண்டிங் செய்யபடுகிறது. இப்படி யார்  யார் என்று சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.

    இவர்களை அந்த காணொளி,செய்திகள் ஈர்க்க காரணம் அந்த செய்தியின் தலைப்பு, அதில் இணைக்க பெற்று இருக்கும் புகைப்படம் தான். இதை சிலர் தங்கள் வருமானத்திற்கு செய்கிறார்கள் (youtube யில் அதிகம் பார்க்கபடும் காணொளி விளம்பரம் மூலம் காசு, facebook யில் விளம்பரம் எல்லா இடத்திலும் இருந்தும் இன்ஸ்டன்ட் ஆர்டிக்கிள்(instant article)  விளம்பரம் அடங்கிய செய்தி பக்கம்). இப்படி ஒரு பக்கம் ட்ரெண்டிங் செய்திகளை உருவாக்க, சிலர் அரசியல் ஆதாயம் தேட காருத்துகளை, சில நிகழ்வுகளை ட்ரெண்டிங் செய்கிறார்கள். உதாரணம் இந்த ஆண்டு வைரமுத்து மேற்கோள் காட்டியது ஊடகத்தின் மூலம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்.

    இந்த ட்ரெண்டிங் சில சமியங்களின் மக்களை யோசிக்க விடுவது இல்லை யாரோ ஒருவர் சொல்லும் காருத்தை தன் கருத்தும் இதுதான் என்று நினைத்து கொள்கிறார்கள். ஒரு தலைவர் சொன்ன கருத்து சரியாக தான் இருக்கும் என்ற ஒரு எண்ணம் அதை யோசிக்காமல் பகிர்வது. அந்த தகவல் சரியா இல்லையா?, இதன் பின்னணி என்ன ? இந்த கருத்து சரியா ? யாரையாவது தவறாக பேச பட்டு இருகிறதா இல்லை வார்த்தைகளில் கண்ணியமகா இருக்கா? என்று யோசிக்க ஒரு நிமிடம் போதும் ஆனால் அவர்களை யோசிக்க விடாமல் செய்யும் ஒன்று அதை உடனே பகிர சொல்கிறது. ஊதாரணம் “தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்”.தமிழன் என்றால் தான் பகிர வேண்டுமா ? அதில் இருக்கும் கருத்து தகவல் நல்லதாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் தமிழன் என்றால் பகிர வேண்டுமா? சிலர் யோசிக்காமல் “proud to be தமிழன் ” என்று பகிர்வார்கள். ஒருவர் மீதோ, ஒரு சமூகம்,கட்சி மீதோ உள்ள ஒரு  அதித நம்பிக்கையும் இதற்கு காரணம்.  
      
        இந்த ட்ரெண்டிங் என்ற ஒன்றுக்கு கூட சாதி மதம் உண்டு இல்லை என்பதை மறுக்கவே முடியாது. இந்த ட்ரெண்டிங் என்கிற ஒன்றால் பாதிக்கபடுவது சாதாரண மக்கள் தான். எதை பற்றி பேச வேண்டுமோ அதை பேசாமல் தேவையற்ற ஒன்றை பேசி கொண்டு இருப்பது.மக்களின் அடிப்படை சிந்திக்கும் திறன் முற்றிலும் மழுங்கிகொண்டே போகிறது மழுங்கடிக்கபடுகிறது.

    இதனால் என்னடா சொல்ல வரனு கேட்டா? எதையும் சிந்தித்துப் பேசுங்க,பகிருங்க அவளோதான். மாற்றங்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதால் மட்டும் வராது. ஆக்கபூர்வமான சிந்தனை வேண்டும் அதை களத்தில் இறங்கி செயல்படுத்த வேண்டும்.  





0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக