• அருவி

    அருவி





    இந்த வருஷம் பிறந்து பார்த்த முதல் திரைப்படம் “அருவி”. இந்த மாதிரி படம் திரைக்கு வருவது எல்லாம் தமிழ் சினிமாவில் குறிஞ்சி பூ பூக்குறது. அப்படி ஒரு கதை. படம் பாக்கும் போது கண் இமைக்க மனசே வராது ஏன்னா அருவி அவ்வளோ அழகு,அருவிங்கர கதாபாத்திரம் அதவிட அழகு.

    ஒரு சாதாரண குழந்தையின் சின்ன சின்ன செய்கையும் துல்லியமாக படம்மூலம் பார்க்கலாம். தந்தை மகளின் அன்பு, அக்கா தம்பியின் சண்டை அதன் பின்பு வரும் பாசம் என சொல்லிக்கொண்டே போகலாம்.

    அசைந்து ஆடும் மயிலாய் தோன்றும் அதிதி பாலன், அருவி மெல்ல மனதுக்குள் வரும் தொடங்கும் நேரம் அது தான். பள்ளிகூடத்தில் வரும் சீன், ஒரு குறும்பு மாணவி.கல்லூரி பருவம், வாழ்கையில் ஒரு மாற்றம் தரும் தருணம்,அவள் சந்திக்கும் மனிதர்கள், சூழ்நிலை கொடுங்கூற்று, அவள் ஆசை எல்லாமே நம் மனதை உருக செய்திடும்.    

    இந்த  உலகம் பணம் என்ற ஒன்றால் தான் இயங்கின்றது என்று நினைத்தால் அது உண்மை, யாரு இப்போ இல்லன்னு சொன்ன ஆனா அத விட முக்கியமா ஒன்னு தான் அன்பு. இங்க பலரிடம் இல்லாத ஒன்னு கூட சொல்லலாம். இந்த இயந்திர வாழ்க்கை நம்ம ஓடுற ஓட்டம் அது எத நோக்கினு  பார்த்த வாழ்கையில் எதாச்சு ஒரு நொடில பணம்,புகழ் சம்பாதிச்சு நானும் இந்த உலகத்துல வாழ்ந்தேனு எல்லாருக்கும் சொல்லணும் அவளோ தான். கூட இருக்குறவன பத்தியும் யோசிக்க மாட்டோம், மத்தவங்கள பத்தியும் யோசிக்க மாட்டோம் “சுயநலம்”.

    இந்த சுயநல வாழ்கையில் நாம் கொடுக்க மறந்த ஒன்னு தான் அன்பு. அந்த அன்பு கிடைக்காதவங்க கிட்ட கேட்டா தெரியும் அவர்களின் வலி. அருவி அழகாக சொல்வாள் இந்த சமுகத்தை பற்றியும் இந்த சமுகத்தில் வாழும் மானிடர்கள் பற்றியும். இந்த சமூகம் நமக்கு கற்று கொடுத்தது எல்லாம் போலியான எண்ணங்கள் தான்.

    ஒருவருடைய (மற்றவர்களின்) வலி யாருக்கும் புரியாது அது தனுக்கு  வரும் போது தான் தெரியும். இங்க பலர் வலியால் துடித்து கொண்டு இருந்தாலும் அவர்களுக்கு நாம் கொடுக்க மறுக்கும் ஒன்று “அன்பு”. உறவுகள் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டதா இருக்கனும் சொல்லுறாங்க. அன்பு இல்லாத உறவுகளில் அன்பு எதிர்பார்ப்பது தவறா ?. நம்ம பேசுற எண்ணங்கள் யாரையும் புண்படுத்தாமா இருக்கனும், அப்படி பார்த்தால் “எதையும் பேச முடியாது, யார் என்ன நெனைச்சா என்ன நம்ம சொல்லுறத சொல்லிடனும் ”. அங்க தான் அன்பு இல்லை. அவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை பேசும் போது அவர் மனம் எப்படி கஷ்டப்படும் என்று யோசித்து அன்பா அழகா கூட சொல்லலாம். 
    யாருகிட்டையும் எதையும் எதிர் பார்த்து உறவு வைத்து கொள்ளக்கூடாது. அவர்களிடம் இருந்து நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் எதோ ஒரு நாள் அவர்கள் உங்களிடம் இருந்து எதையோ பெற்று கொள்வார்கள். ஆனால் அவர்கள் உங்களுடன் ஒரு இணைப்பில் இருப்பதிற்கு காரணம் அன்பு தான். 
      
    அருவியும் இதை தான் சொன்னாள். அவள் எதிர்பார்த்ததும் அன்பு தான். இங்க நம்ம கிட்ட இல்லாத ஒன்னு அந்த அன்பு தான். யார் மீதும் நம்பிக்கை இல்லை இந்த தந்திர சுயநல ஆசையில் நம்ம அந்த அன்பு என்ற ஒரு விஷியத்தை மறந்துவிட்டு வாழ்கிறோம். அருவி சமுகத்தை பற்றி சொன்ன விதம் கைதட்டலுடன் விசில் பறந்தது.

    இந்த உலகத்துல எல்லா வளத்துடன் வாழறவங்க அதிக நபர் இருக்கலாம் ஆனா அன்போடு வாழுறோம்னு சொல்லுறவங்க சிலர் தான். எதோ இந்த அருவி அதிகம் யோசிக்க வைக்கிறாள்.அவள் சொன்ன வார்த்தைகள், புன்னகை என எல்லாம் ஒரு மாயாய் என்னால் அவளை கடந்து யோசிக்க முடியவில்லை. ஏனோ ஒரு மணி நேரம் போதாவில்லை கண்ணீர் நிற்பதற்கு. இந்த புது ஆண்டின் ஒரு புத்துணர்ச்சி அருவி. எத்தனை புத்தகம் படித்தாலும் அன்பை அழகா அருவி போல் சொல்ல முடியாது, அருவியாய் திரையில் எண்ணங்களை அள்ளி தந்த புதுமுக இயக்குனர் “அருண்” மற்றும் அவர் குழுவிற்கும் வாழ்த்துக்கள். “அருவி” மக்கள் கொண்டாட மறந்த ஒரு படம்.          

    நான் இந்த படத்த ரொம்ப நாள் கழிச்சு தான் பார்த்தேன், ஆனா சிலர் படத்த பார்த்துவிட்டு “எனக்கு குழந்தை பொறந்த 'அருவி'னு பெயர் தான் வைப்பேன் ”ஸ்டேடஸ் போட்டாங்க அப்போ புரியல ஆனா இப்போ புரியுது. எல்லோரும் அருவி மீது காதல் கொண்டார்கள் ஆனால் எனக்கு அருவி மீது காதலை கடந்த மதிப்பும் மரியத்தையும் தான் வந்துச்சு. ஏன்னா எனக்கு அருவி விட அன்பும் அக்கறையும் காட்டுகின்ற அம்மா இருக்குறாங்க. அடுத்த பிறவி எதற்க்கு இன்னும் அன்பு அருவியாய் அனைவரின் உள்ளத்திலும் பாய்ந்து ஓட இன்றே புதிதாய் பிறப்போம்.             

                        அன்பின் கொடி படர செய்வோம்
                           
               
                   

                   

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக