• காலத்தின் கட்டாயம்



    கடந்த வாரம் பேருந்து கட்டணங்கள் உயர்த்திய மாநில அரசு தரும் காரணங்கள் சற்றும் ஏற்க்க முடியாத ஒன்று.

    முதல் அமைச்சர் : போக்குவரத்து துறை நஷ்டத்தில் உள்ளது பேருந்துகள் மக்கள் சொத்து இந்த நஷ்டத்தை மக்கள் தான் சரிக்கட்ட வேண்டும்.

    அமைச்சர் செல்லூர் ராஜு : மக்கள் பொருளாதார ரீதியில் நல்ல நிலைமையில் தான் இருக்கின்றனர்




    ஆனால் ஒரு ஆய்வு நிறுவனம் தரும் ஆய்வு அறிக்கை
    "இந்தியாவில் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட செல்வ வளத்தில் 73% சொத்துக்கள் வெறும் 1% உச்சபட்ச கோடீஸ்வரர்களிடம் குவிந்துள்ளதாக ஆக்ஸ்போம் நிறுவனத்தின் பொருளாதார ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம், நாட்டில் வருமான ஈட்டுவதில் ஏழைகள், பணக்காரர்கள் இடையே மிகமோசமான இடைவெளி உருவாகிவருவது தெரியவந்துள்ளது."



    இதனை எளிதாக சொல்லவேண்டும் என்றால்
    "ஏழைகள் ஏழையாக தான் இருகிறார்கள். பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகா செல்வ செழிப்போடு தான் வாழ்கிறார்கள்".


    நடுத்தர மக்கள், ஏழை மக்கள் என்று சொல்லப்படும்
    உழைக்கும் மக்கள் பொருளாதார ரீதியாக இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்பதே உண்மை.

    ஆளுமை இல்லாத நபர்கள் ஆட்சி செய்வதால் தான் இந்த பெரும் பிரச்சனை.


    போக்குவரத்து நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பே இல்லை. நகர்புறம் இருந்து வரும் லாபம் கிராமப்புறம் பேருந்து சீராக இயங்க உதவும். யார் மேல தப்புன்னு பார்த்த அரசாங்கம் தான் முக்கிய காரணம்.
    இந்த காணொளிப்பதிவு அதையும் நீங்கள் தெரிந்து கொள்ளாம்


    இதன் நோக்கம் போக்குவரத்து நஷ்டத்தை ஈடுகட்ட அல்ல போக்குவரத்து துறையை தனியார் மையம் மாற்றுதல் என்பதே.

    எப்படி என்று கேட்டால்.

    பெட்ரோல் டிசெல் விலை நிர்ணனைக்கும் அதிகாரம்
    தனியார் கையில் உள்ளது. தமிழ் நாட்டில் ஓம்னி பஸ் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இந்த ஒமினி பஸ் முதலாளிகள் யாரு ? அதிகம் இதை பினாமிகள் பெயரில் நடத்தி கொண்டு இருக்கும் அமைச்சர்கள், முன்னால் அமைச்சர்கள் தான் அவர்கள் தங்கள் வருவாய் கூட்டதான் இப்படி அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

    நான் இப்போது கன்னியாகுமரி போக வேண்டும் சென்னையில் இருந்து.
    பழைய கட்டணம் : 490
    புதிய கட்டணம் :760 மேல்

    பண்டிகை நாட்களில் பேருந்து கிடைப்பது ரொம்ப கஷ்டமா விசியம் தான்.
    760 மேல் கொடுத்து பயணம் செய்யும் நான் அதன் சேவை மட்டமானது தான். ஆனால் சட்டு என்று ஒமினி பஸ் கட்டணம் அதே 760 மேல் தான் கொஞ்சம் அரசு விட சொகுசு அதிகம் தான். நான் நடுத்தர வர்க்கம் என்றால் ஒருநாள் தானே ஓட்ட பஸ்ல போறதுக்கு ஒரு 50 அதிகம் கொடுத்து தனியார் பேருந்துகளில் போகலாம் என தோணும்(முன் பதிவு எளிதாக இருகின்றது).அரசு பேருந்து முன்பதிவு செய்தலாம் நவீன இந்தியாவில் மற்ற மாநில போக்குவரத்து துறை தரும் சேவை இல்லை என்று தான் சொல்லலாம். பண்டிகை நாட்களில் அரசு பேருந்து எண்ணிக்கை குறைவு என கூறலாம் (பணிமனையில் பேருந்து எண்ணக்கை வெறும் கணக்கு காட்ட மட்டும்தான் அதனை பேருந்துகள் இருந்தால் தனியார் பேருந்துகளுக்கு தேவை இல்லை ). இது தான் சாக்கு அரசு "மக்கள் அரசு பேருந்துகளை பயன் படுத்தவே இல்லை மீண்டும் நஷ்டம் என்றும் சொல்லும்" (புதிய பேருந்து எதுவும் வாங்க மாட்டார்கள் அதிகம் பேருந்து பண்டிகை நேரத்தில் விடவும் மாட்டார்கள் இருக்கிற பேருந்து ஓட்ட பஸ் தான் அதிவும் 60 கீமீ மேல் போகாது கேட்டால் வேக கட்டுபாட்டு கருவி பொறுத்த பட்டு இருக்கு என்று சொல்ல்வார்கள். என் பயண நேரம் மாட்டும் 14 மணி நேரம் ). இப்படி இருக்குற போக்குவரத்து துறை தனியார் மையம் ஆக்குறோம் சொல்லுவாங்க அப்புறம்.

    அவங்க(தனியார் பேருந்து உரிமையாளர்கள்) அவங்க இஷ்டத்துக்கு கட்டணம் வைப்பாங்க. இது உடனே நடக்குமா னு கேட்டா இல்லை குறைந்த பட்சம் 7-10 வருடங்கள் ஆகும். அரசு தரும் ஒரே பதில் "அரசு நிர்ணையிக்கும் கட்டணம் தான் தனியார் பேருந்துகள் கடைபிடிக்கும் புகார் இருந்தால் ௦௦௦௦௦௦௦௦௦௦ என்ற எனுக்கு தொடர்பு கொள்ளவும் " உண்மை உங்களுக்கே தெரியும் அவங்க எவளோ கட்டணம் சொல்லுவங்கனு. நீங்க புகாரும் பண்ண முடியாது.

    ஒரு சாதார நபரால் அந்த தொகை கொடுப்பது கஷ்டம்.

    இங்க அரசு தனியார்க்கு மாட்டும் தான் வேலை பாக்குது தனியார் மையம் தான் இவங்களோட குறிக்கோள். மக்கள் நலன் எப்படியும் கொஞ்சம் கூட எடுத்துக்க மாட்டாங்க.

    நம்ம கட்டுற வரி எங்க போகுதுனே தெரியல. அரசாங்கம்னு சொல்லிட்டு இந்த சமஉ என்ன பன்னுரங்கனு தெரியல. இதை பற்றி யோசிக்க நமக்கு நேரமும் இல்லை.


0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக