• மகிழினி- கோவமின்றி கண்ணீர்



    மகிழினி-  கோவமின்றி கண்ணீர்


    மின்னும் அலங்கார விளக்குகள்
    அதிரும் பாடல்கள்
    அன்று புத்தாண்டு
    கோலகல கொண்டாட்டம்.

    போக வேண்டும்
    என்ற ஆசை,
    சக்தி இயலாமை
    மகிழினி அழைத்து
    செல்லவில்லை.

    இவள் பேச்சும்
    எடுபடவில்லை,
    இவள் கோரிக்கைகள்
    ஏற்கப்படவில்லை.

    எதுவும் தேவை இல்லை
    போனால் மட்டும் போதும்
    என்ற ஆசை.

    கோவம் கேள்வியாய் 
    மாற,
    பதில்கள் ஒன்று தான்
    என்று ஆனது.

    கோவத்தின் உச்சம்
    தொட்டாள்,
    விழிகள் கலங்கி
    கண்ணீர் தரை தொட்டது,
    வார்த்தைகள் மௌனம்
    சாதித்தது. 

    வாசல் அருகே நின்று
    கொண்டாள்,
    மின்னும் வெளிச்சம்
    இவள் முகம் ஒளிர,
    ஒலி கேட்டு மனம்
    நிறைவு கொண்டாள்.   
     
    கோவமின்றி கண்ணீர்
    ஏது?
    மகிழினி -இவள் பேசும் அதிகாரம்.


      

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக