நகரம் நரகம் என
சொன்ன நாட்கள் போய்
நாடே நரகம்
ஆனது ஏனோ ?
தாய்ப்பாலுக்கு பதில்
சேர்லாக் வந்த
அன்றே
நாம் இறந்து விட்டோம்
இயற்கை கொடுத்த வளம்
இறைவன் பெயர் சொல்லி சிலர்
இரக்கம் இன்றி சிலர்
இறந்து போன உயிர்கள் எத்தனையோ ?
சுயநலம் சுயநலம்
நான் வாழ்ந்தால் போதும்
என்று சொல்லும் தலைமுறை
நாளை உன் பிள்ளை
சுயமாய் வாழ இயலாது
கடன் காரன்
இயற்கை தந்த கடன்
கைமாறு செய்வது யாரோ ?
ஆசையின் உச்சம்
மனிதனே ஒரு கருவேலம்
மரம் தானே
தண்ணீர் தேடி
பயிர்கள் வாடி
விலை சிகரம் ஓடி
பின் வாழ பொருள் தேடி
ஒரு நாள்
மாய்ந்து போவோம் வா
இன்று நிழல்
தேடும்
மூடர்களே
நாளை உன் நிழலில் கூட
உன் சந்ததி நிற்காது
👏👏👏👏👏👌👌👌