• கான்கிரீட் சுடுகாடு


    எட்டுக்கு எட்டு போதும்
    எட்டி பார்த்தால்
    எல்லாம்  வேண்டும்.

    வாழ்கையில் உயரம் வேண்டும்
    ஆனால் இருக்கும் இடமும்
    உயரத்தில் வேண்டும்.

    சுவாசிக்க காற்று
    செயற்கையாய் இருந்தால் போதும்
    வற்றா நதி வேண்டாம்
    குழாய் போட்டு எடுக்கும்
    வியாதி தராத குடிநீர் போதும்.

    குழந்தை விளையாட
    பூங்கா வேண்டும்
    குழந்தையுடன் விளையாட
    நேரம் வேண்டாம்.

    கட்டிட கூண்டுகளில்
    காலத்தின் வேகத்தில்
    காரணம் இல்லாமல் வாழும்
    சுயநல வாழ்க்கை.

    உதவி என்றால் சுற்றமும் அறியாது
    உதவ நினைக்கும்
    சுற்றமும்  கிடையாது.

    காற்றை நுகர்ந்திடாத
    கருமேகத்தை பார்த்திடாத
    கம்மாய்கள் இல்லாத
    கருப்பு உலகம்

    எட்டுக்கு எட்டும்
    ஆறுக்கு இரண்டும்
    வசிக்கும் ஓர்
    வாழ்க்கை முறை.  

    விலை உயர்ந்தாலும்
    விவசாய்கள் இறந்தாலும்
    விளை நிலங்களில் கட்டிடங்கள்
    விண்ணை தொட
    கட்டிட கூண்டுகளின்
    கதுவுகள் திறக்காத
    ஒரு கல்லறை.

    இந்த உயர்ந்த
    கட்டிடங்களின்
    வாழும் உயர்ந்த
    உள்ளங்களின்
    வாழ்க்கை
    கான்கிரீட் சுடுகாடு ஆகும்  
    நாட்கள் வெகு தொலைவில் இல்லை.






0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக