• விழியழகி

    வண்ண பிம்பம்  
    கருமை ஓவியத்தில்,
    யாரோ வரைந்த ஓவியத்தில் 
    இத்தனை பிரதிபலிப்பா 
    கருமையின் பெருமை 
    இங்கே பேசாத 
    நூல்கள் உண்டோ
      
    இரு துருவத்தின் 
    ஒரு முற்றுப்புள்ளி 
    எத்தனை  போராளிகள் இந்த 
    விசையில் சிக்கினரோ ?

    கருவளையம் இல்லை 
    கருமையின் அழகிய 
    மஸ்கார மஸ்கட்டை மிஞ்சிவிடுமோ ?
    உன் "மை" யும் 
    ஒரு  அழகிய உண்மை தானோ ?

    எத்தனை முறை 
    பார்பின்  
    விழியன் ஆசை  தீருமோ  
    இமைக்கும் நொடி 
    விழுந்தேன் 
    மீண்டும் எழுந்தேன் 

    நவரசம் காட்டும் உன் 
    முகம், 
    உன் விழியில்  கண்டேன்
    உன் முகம் பாராதது ஏனோ ? 

    காற்று கூட 
    துரோகம் செய்துவிட்டது  
    உன் முகம்  யான் 
    அறியேனோ 
    நீ யார் என்று 
    அறியேனோ


    உன் கண்கள் களவு 
    செய்த கைதிகள் எத்தினையோ ?
    நீ ஒன்று அல்ல 
    ஒரு பாலினம்
    பேசும் பாலினம் 
    எண்ணிக்கை 
    வெறும் கோப்பு 
    உன்னை போன்று 
    திரையில் 
    ஒளிந்து கொண்ட 
    அழகிய முகங்கள் 
    எத்தனையோ ?



0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக